» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பங்குனி உத்திரத் திருவிழா: ஏப்ரல் 1-ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
வெள்ளி 20, மார்ச் 2026 5:03:53 PM (IST)
பங்குனி உத்திரத் திருவிழாவைக் கொண்டாடும் வகையில், வரும் ஏப்ரல் 1-ம் தேதி (புதன்கிழமை) தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 1-ம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.இருப்பினும், அவசர காலப் பணிகளைக் கவனிக்கும் வகையில் முக்கிய அரசு அலுவலகங்கள் மட்டும் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் இயங்கும். ஏற்கனவே திட்டமிடப்பட்ட பொதுத்தேர்வுகள் மற்றும் பிற அரசுத் தேர்வுகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதால், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. அவர்கள் தங்களது பணிகளைத் தொடர வேண்டும்.
இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஏப்ரல் 11-ம் தேதி (சனிக்கிழமை) அன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு அண்டை மாவட்டமான நெல்லைக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)

நெல்லையில் வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் - கொத்தனார் கைது!
செவ்வாய் 12, மே 2026 8:42:37 AM (IST)

விஜய் முதல்வராவதில் இழுபறி நீடிப்பால் விரக்தி: தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி
சனி 9, மே 2026 3:10:10 PM (IST)

கோடை மழையால் குற்றாலம் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
சனி 9, மே 2026 9:00:15 AM (IST)

பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு: மே 31-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியர் உத்தரவு!
வெள்ளி 8, மே 2026 4:51:54 PM (IST)

திருநெல்வேலி நூலகத்தில் நூல் திறனாய்வு விழா
வெள்ளி 8, மே 2026 12:52:25 PM (IST)


