» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நாங்குநேரி தொகுதி: பறக்கும் படை பணிகளைப் பொது பார்வையாளர் ஸ்ரீ வஷ்தவா ஆய்வு!
சனி 11, ஏப்ரல் 2026 11:41:35 AM (IST)

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடி மையங்களில் நிலவும் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர் அனுபா ஸ்ரீ வஷ்தவா நேரில் ஆய்வு செய்தார்.
தமிழகச் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பர்க்கிட்மாநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி, நடுவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சீவலப்பேரி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மருதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் அமையவுள்ள வாக்குச்சாவடி மையங்களை அவர் பார்வையிட்டார்.
அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு, வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை மற்றும் மின்சார வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளப் பாதைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் இடவசதி ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து உறுதி செய்தார்.
வாக்குச்சாவடிகள் மட்டுமின்றி, தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாகன சோதனைச் சாவடிகளையும் அவர் ஆய்வு செய்தார். பறக்கும் படையினர் (FS) மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரின் (SST) செயல்பாடுகள், வாகனத் தணிக்கை முறைகள் மற்றும் விதிமுறை மீறல்களைக் கண்காணிக்கும் பணிகள் குறித்தும் அவர் விரிவான ஆய்வை மேற்கொண்டார்.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பார்வையாளரின் இந்த நேரடி ஆய்வு தேர்தல் பணிகளை மேலும் விரைவுபடுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!
செவ்வாய் 26, மே 2026 4:55:57 PM (IST)

சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள்: பெண்கள் விண்ணபிக்கலாம் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 26, மே 2026 3:53:11 PM (IST)

விடுதி தோழிகளை செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய பெண் கைது!
செவ்வாய் 26, மே 2026 9:12:05 AM (IST)

முதலமைச்சர் விஜய் குறித்து ஆபாசப் பேச்சு: வீடியோ வெளியிட்ட மென்பொருள் பொறியாளர் கைது!
செவ்வாய் 26, மே 2026 9:04:35 AM (IST)

தென்காசியில் அமைச்சர் டி.கே.பிரபு திடீர் ஆய்வு: 18 கற்குவாரிகளை மூட அதிரடி உத்தரவு!
திங்கள் 25, மே 2026 5:37:59 PM (IST)

இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் சென்சஸ் : நெல்லையில் பயிற்சி தொடக்கம்!
திங்கள் 25, மே 2026 12:54:24 PM (IST)


