» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கும் பணி : ஆட்சியர் சுகுமார் ஆய்வு
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:33:47 PM (IST)

அம்பாசமுத்திரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தினை திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு செய்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026- வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, சட்டமன்ற பொதுத்தேர்தலில் எந்தவொரு வாக்காளர்களும் விடுபட்டு விடக்கூடாது என்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
18 வயது நிரம்பிய வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி திருநெல்வேலி மாவட்டத்தில் ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்படவுள்ள வாக்குப்பதிவு மையங்களில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு போன்றவை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், இன்றையதினம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வி.கே.புரம் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, அம்பாசமுத்திரம் ராணி மேல்நிலைப்பள்ளி, திருவள்ளுவர் கல்லூரியில் போன்ற இடங்களில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடி மையத்தின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் இன்று (13.04.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வரிசை எண்கள் அமைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரிசைப்படுத்தி வைப்பதற்கான பணிகள் மற்றும் வாக்கு எண்ணும் அறைகளில் வாக்கு எண்ணிக்கையின்போது முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட ஏதுவாக பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், பார்வையிட்டார்.
ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அனிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுப்பிரமணியன், தேர்தல் வட்டாட்சியர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குற்றாலம் மெயின் அருவியில் குளித்த பெண் மூச்சுத்திணறி உயிரிழப்பு!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:45:00 AM (IST)

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் போலி சிபிஐ அதிகாரி கைது: போலி அடையாள அட்டைகள் பறிமுதல்
சனி 13, ஜூன் 2026 8:57:57 AM (IST)

நெல்லையில் முதல் பெண் தாய்சேய் ஊர்தி வாகன ஓட்டுநர் சேவை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:47:16 PM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா முன்னேற்பாடுகள் : ஆட்சியர் ஆலோசனை!
வெள்ளி 12, ஜூன் 2026 10:41:23 AM (IST)

லாரி ஓட்டுநர் தலை துண்டித்துக் படுகொலை : உறவினர்கள் போராட்டம்; போலீஸ் குவிப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 8:19:43 AM (IST)

ஐந்தருவி, பேரருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை: சிற்றருவி, புலியருவியில் உற்சாக குளியல்!
வியாழன் 11, ஜூன் 2026 11:21:31 AM (IST)


