» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வாக்காளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட வேண்டும் : அதிமுக வேட்பாளரின் பேச்சால் சர்ச்சை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:51:43 PM (IST)

ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவது குறித்து அதிமுக வேட்பாளர் பேசியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் எம்பி பிரபாகரன் போட்டியிடுகிறார். தேர்தல் பணிகளை முன்னிட்டு, அதிமுக ஒன்றிய மற்றும் கிளைக் கழகச் செயலாளர்களுடன் அவர் அண்மையில் ஆலோசனை நடத்தினார். இந்த ரகசியக் கூட்டத்தில் அவர் பேசியதாகக் கூறப்படும் வீடியோ ஒன்றே தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில் பிரபாகரன் பேசியதாவது: "வாக்காளர் ஒருவருக்குத் தலா ரூ.1,000 வழங்கப்பட வேண்டும். திமுகவினருக்குத் தவிர்த்து, காங்கிரஸ் ஆதரவாளர்கள் உள்ளிட்ட மற்ற அனைவருக்கும் பணம் வழங்கப்பட வேண்டும். யார் கேட்டாலும் 'இல்லை' என்று சொல்லாமல் கொடுங்கள்; அதற்குத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
ராதாபுரம் தொகுதியில் கடந்த காலங்களில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தீர்மானிக்கப்பட்டதை நினைவில் கொண்டு, எந்தவொரு வாக்கையும் தவறவிடாமல் கவனமாகச் செயல்பட வேண்டும்." என்று பேசினார்
தேர்தல் ஆணையம் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதிமுக வேட்பாளரே வெளிப்படையாகப் பணம் வழங்க அறிவுறுத்தும் வகையிலான இந்த வீடியோ வெளியாகி இருப்பது தென்காசி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தனிநபர் கடன், கல்விக் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் ஆனந்த் மோகன் தகவல்!
திங்கள் 8, ஜூன் 2026 5:46:43 PM (IST)

நெல்லையில் அண்ணாமலை இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம்: பொதுமக்கள் ஆர்வம்!
திங்கள் 8, ஜூன் 2026 5:18:27 PM (IST)

கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக் கூடாது? உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
திங்கள் 8, ஜூன் 2026 4:16:17 PM (IST)

நெல்லை - தென்காசி வழித்தட எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே தகவல்!
திங்கள் 8, ஜூன் 2026 10:56:37 AM (IST)

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை: குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை
திங்கள் 8, ஜூன் 2026 10:37:14 AM (IST)

நெல்லை அருகே இருதரப்பு மோதலில் பெண் உள்பட 6 பேருக்குச் சரமாரி அரிவாள் வெட்டு: 7 பேர் கைது!
திங்கள் 8, ஜூன் 2026 8:57:56 AM (IST)


