» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாவட்டத்தில் மே 1-ஆம் தேதி மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 11:00:07 AM (IST)
மே தினத்தை முன்னிட்டு வருகிற மே 1-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அரசாணைகள் மற்றும் சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை ஆணையரின் கடித வழிகாட்டுதலின்படி, மே 1-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மே தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளை மூட ஆணையிடப்பட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக் கடைகள் (FL1 உரிமம்), கடைகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் (Bar), தங்கும் விடுதிகளுடன் இணைந்த FL2, FL3, FL3A, FL3AA மற்றும் FL11 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் இவை அனைத்தும் மே 1-ஆம் தேதி கட்டாயம் மூடப்பட வேண்டும்.
விதிகளை மீறி அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் போலி சிபிஐ அதிகாரி கைது: போலி அடையாள அட்டைகள் பறிமுதல்
சனி 13, ஜூன் 2026 8:57:57 AM (IST)

நெல்லையில் முதல் பெண் தாய்சேய் ஊர்தி வாகன ஓட்டுநர் சேவை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:47:16 PM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா முன்னேற்பாடுகள் : ஆட்சியர் ஆலோசனை!
வெள்ளி 12, ஜூன் 2026 10:41:23 AM (IST)

லாரி ஓட்டுநர் தலை துண்டித்துக் படுகொலை : உறவினர்கள் போராட்டம்; போலீஸ் குவிப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 8:19:43 AM (IST)

ஐந்தருவி, பேரருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை: சிற்றருவி, புலியருவியில் உற்சாக குளியல்!
வியாழன் 11, ஜூன் 2026 11:21:31 AM (IST)

மும்பை தாதர் - சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு : பயணிகள் கோரிக்கை!
வியாழன் 11, ஜூன் 2026 10:11:04 AM (IST)


