» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி நூலகத்தில் நூல் திறனாய்வு விழா
வெள்ளி 8, மே 2026 12:52:25 PM (IST)

திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் தாமிரபரணி வாசகர் வட்டம் மற்றும் தேசிய வாசிப்பு இயக்கத்தின் சார்பில் நூல் திறனாய்வு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.
வாசகர் வட்டத்தின் தலைவர் முனைவர் சரவணகுமார் வரவேற்றார் மதிப்புறு முனைவர் தம்பான் தலைமை வகித்தார் கவிஞர் பாப்பாக்குடி செல்வமணி முன்னிலை வகித்தார் நெல்லை மருத்துவக்கல்லூரி செவிலியர் மணிகண்டன் எழுதிய முதியோர் நலம் பற்றிய முதுமை ஒரு வரம் நூலை தமிழ் செம்மல் முத்தாலங்குறிச்சி காமராசு திறனாய்வு செய்தார்
நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரிக்கு முழு உடல் தானம் செய்த அருங்காட்சியகத்தில் பணிபுரிகின்ற உலகநாதன் குருதி கொடை வழங்கிய சமுக ஆர்வலர் சுரேஷ் மற்றும் நோயுற்ற தந்தையை பராமரிக்கும் சகோதரர் கள் சுவாமிநாதன் சரவணன் ஆகியோருக்கு கேடயம் வழங்கி பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
நூலாசிரியர் ஏற்ப்புரை வழங்கினார் கவிஞர் ஜெயபாலன் மேனாள் துணைஆட்சியர் தியாகராஜன் கவிஞர்கள் சுப்பையா ஜெயபாலன் பிரபு விரைமைதீன் வாழ்த்துரை வழங்கினார்கள் வாசகர் வட்டத்தின் மாணிக்கவாசகம் பிச்சுமணி பொன்னையா ஐசக்பாலசிங் சேதுராமன் மாணவர்கள் அஜய்பிரவின் முத்து கண்ணன் அபிஷேக் ஆகியோர் கலந்து கொண்டனர் மரியபால்ராஜ் மணிகண்டன் ஆகியோர் நூலக புரவலராக சேர்ந்தனர் கிளை நூலகர் அகிலன் முத்துகுமார் நன்றி கூறினார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தனிநபர் கடன், கல்விக் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் ஆனந்த் மோகன் தகவல்!
திங்கள் 8, ஜூன் 2026 5:46:43 PM (IST)

நெல்லையில் அண்ணாமலை இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம்: பொதுமக்கள் ஆர்வம்!
திங்கள் 8, ஜூன் 2026 5:18:27 PM (IST)

கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக் கூடாது? உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
திங்கள் 8, ஜூன் 2026 4:16:17 PM (IST)

நெல்லை - தென்காசி வழித்தட எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே தகவல்!
திங்கள் 8, ஜூன் 2026 10:56:37 AM (IST)

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை: குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை
திங்கள் 8, ஜூன் 2026 10:37:14 AM (IST)

நெல்லை அருகே இருதரப்பு மோதலில் பெண் உள்பட 6 பேருக்குச் சரமாரி அரிவாள் வெட்டு: 7 பேர் கைது!
திங்கள் 8, ஜூன் 2026 8:57:56 AM (IST)


