» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மீண்டும் கோளாறு: 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!
வியாழன் 9, ஜூலை 2026 10:40:43 AM (IST)

டர்பனில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டின் நிதி உதவியுடன் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. புதன்கிழமை மாலை முதலாவது அணு உலையின் டர்பன் பகுதியில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் உடனடியாகப் பழுதைச் சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, முதலாவது அணு உலையில் உள்ள ஜெனரேட்டரில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. பழுது சரிசெய்யப்பட்டு அண்மையில்தான் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. இந்நிலையில், டர்பனில் ஏற்பட்ட பழுது காரணமாக மீண்டும் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. முதலாவது அணு உலையில் அடுத்தடுத்து பழுது ஏற்பட்டு வரும் நிலையில், 2-வது அணு உலையில் வழக்கம் போல் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களுக்கான த.வெ.க. ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை : நெல்லையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:51:53 AM (IST)

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:33:41 PM (IST)

காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி : தலைமை காவலர் உள்பட 2பேர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:31:58 AM (IST)

திருநெல்வேலியில் செப். 19-ல் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:09:15 AM (IST)

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: வழக்கறிஞர் அதிரடி கைது!
சனி 22, ஆகஸ்ட் 2026 8:55:08 AM (IST)

நெல்லையில் குரூப் 2 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24ஆம் தேதி தொடங்குகிறது!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:44:13 AM (IST)


