» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலத்திலிருந்து பாபநாசம் சென்றபோது விபத்து: சுற்றுலா பயணி பரிதாப பலி; 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:48:25 AM (IST)

கடையத்தில் வேன் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஈரோட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 10 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி கரட்டாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் 25 பேர் வேன் மூலம் தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்குச் சுற்றுலா வந்திருந்தனர். அங்கு அறை எடுத்துத் தங்கி அருவிகளில் குளித்த பின், குழுவிலிருந்து 11 பயணிகள் மட்டும் வேனில் பாபநாசத்திற்குப் புறப்பட்டனர். வாகனத்தைக் கொடுமுடி தாமரைப்பாளையம் பகவதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கந்தசாமி மகன் சக்திவேல் ஓட்டினார்.
வேன் கடையம் அய்யம்பிள்ளைக்குளம் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் தலைகீழாகக் கவிழ்ந்தது. விபத்து தொடர்பான தகவலறிந்த கடையம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இவர்களுடன் அப்பகுதிப் பொதுமக்களும் இணைந்து வேனில் படுகாயமடைந்தவர்களை மீட்டனர்.
வாகனத்தின் கீழ் பயணி ஒருவர் சிக்கியிருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாகப் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு வேன் தூக்கி நகர்த்தப்பட்டபோது, வாகனத்தின் கீழ் சிக்கியிருந்த பயணி தலை நசுங்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. விசாரணையில், உயிரிழந்தவர் ஈரோடு மேட்டுக்கடை வேப்பமலை பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த சின்னசாமி மகன் சரவணன் என்பது தெரியவந்தது.
இவ்விபத்தில் கரட்டாம்பாளையத்தைச் சேர்ந்த சாந்தகுமார், மதுபாலன், கீர்த்தி குமார், மனோகரன், மகேஷ், கொடுமுடியைச் சேர்ந்த உதயகுமார், ராஜேஷ்குமார், கிருபாகரன் உள்ளிட்ட 10 பயணிகள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காகத் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து தொடர்பாகக் கடையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நாளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்; 7 பேர் கைது!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:39:29 PM (IST)

திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 11:57:39 AM (IST)

மதுபோதை தகராறில் வெறிச்செயல்: வாலிபரை வெட்டிக்கொன்ற 3 சிறுவர்கள் சிக்கினர்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 4:52:09 PM (IST)

மிலாடி நபி: மதுபானக்கடைகள், பார்களை மூட ஆட்சியர் ஆனந்த் மோகன் உத்தரவு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:42:41 PM (IST)

மக்களுக்கான த.வெ.க. ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை : நெல்லையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:51:53 AM (IST)

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:33:41 PM (IST)


