» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆக.15ல் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு

புதன் 12, ஆகஸ்ட் 2026 3:22:47 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில், சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 15ஆம் தேதி டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூட மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் உத்தரவிட்டுள்ளார். 

உள் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் 15.08.2026 (சனிக்கிழமை) சுதந்திர தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் மதுபானக்கடைகள் (FL1 உரிமங்கள்) அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த FL2, FL3, FL3A, FL3AA & FL11 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்படவேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. 

எனவே, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மதுபானக்கடைகள் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் அனைத்தும் 15.08.2026 (சனிக்கிழமை) சுதந்திர தினத்தை முன்னிட்டு மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory