» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கிணறு வெட்டும் பணியின் போது கயிறு அறுந்து விபத்து: 3 தொழிலாளர்கள் பலி!
செவ்வாய் 30, ஜூலை 2024 11:27:20 AM (IST)
திருவெண்ணெய்நல்லூர் அருகே கிணறு வெட்டும் போது, பொக்லைன் ரோப் அறுந்து விபத்து ஏற்பட்டதில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டம், அருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் கண்ணன். இவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றை ஆழப்படுத்தும் பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகேயுள்ள பெருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்த தணிகாசலம் (48), நரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் ( 40), உளுந்தூர்பேட்டை நெய்வணை கிராமத்தைச் சேர்ந்த முருகன் (38) ஆகியோர் நேற்று இரவு பொக்லைன் இயந்திரம் உதவியுடன் கிணற்றை ஆழ்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பொக்லைன் இயந்திரத்தில் கட்டப்பட்டிருந்த ரோப் அறுந்து கீழே விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இதில், தணிகாசலம், ஹரிகிருஷ்ணன், முருகன் ஆகிய 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு கிணற்றுக்குள்ளேயே உயிரிழந்தனர். தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேர்களின் சடலங்களையும் கைப்பற்றி, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலத்தின் உரிமையாளர் கண்ணனை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை தீவிரம்: இதுவரை ரூ.30.48 லட்சம் பறிமுதல்!
வெள்ளி 27, மார்ச் 2026 12:50:33 PM (IST)

விஜய் முதலில் மன்னிப்பு கேட்கட்டும்: 5 கேள்விகளை எழுப்பி பொன்ராஜ் பதிலடி!
வெள்ளி 27, மார்ச் 2026 12:09:45 PM (IST)

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு: கடும் எதிர்ப்பால் மன்னிப்பு கோரினார் எஸ்.வி.சேகர்!
வெள்ளி 27, மார்ச் 2026 11:36:58 AM (IST)

அண்ணா பல்கலை. மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை: அண்ணாமலை கடும் கண்டனம்
வெள்ளி 27, மார்ச் 2026 11:28:05 AM (IST)

தவெக பெண்கள் குறித்து பொன்ராஜ் சர்ச்சை பேச்சு: டிஜிபி அலுவலகத்தில் விஜய் புகார்!
வெள்ளி 27, மார்ச் 2026 10:37:27 AM (IST)

அதிமுக கூட்டணியில் இருந்து விலகல்: புதிய தமிழகம் தனித்துப் போட்டி - கிருஷ்ணசாமி அறிவிப்பு!
வெள்ளி 27, மார்ச் 2026 8:43:47 AM (IST)

