» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெண்களிடையே திமுகவுக்கு ஆதரவு அதிகரிப்பு: அமைச்சர் பெ.கீதாஜீவன் பேச்சு!
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 9:57:44 AM (IST)

தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளதால் திமுகவுக்கு பெண்களிடையே ஆதரவு மேலும் அதிகரித்துள்ளதாக, அமைச்சர் பெ. கீதாஜீவன் கூறினார்.
கோவில்பட்டியில் நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் கா. கருணாநிதி வரவேற்றார். நகர அவைத்தலைவர் பி.எம். முனியசாமி தலைமை வகித்தார். நகர துணைச் செயலர்கள் எம்.டி.ஏ. காளியப்பன், ச. அன்பழகன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தா. உலகராணி, நகரப் பொருளாளர் வி.சி. ராமமூர்த்தி, மாவட்டப் பிரதிநிதிகள் செ. ரவீந்திரன், எஸ். புஷ்பராஜ், கோ. மாரிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ. கீதாஜீவன் பேசியதாவது: கடந்த பேரவைத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். 2026 பேரவைத் தேர்தலில் இங்கு வெற்றிபெற வேண்டும் என உறுதியேற்க வேண்டும். மேலும், தமிழகத்தில் 220 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற வேண்டும் என, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். அதற்காக இப்போதிருந்தே நாம் களப் பணியாற்ற வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றியுள்ளதால், பெண்களிடையே திமுகவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டம் அமைச்சர் உதயநிதியின் துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. லிங்கம்பட்டி, கடம்பூரில் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2026ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி என்ற இலக்கை நோக்கிப் பயணிப்போம் என்றார்.
கூட்டத்தில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் என். ராதாகிருஷ்ணன், ஒன்றியச் செயலர்கள் வீ. முருகேசன், கி. ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் இரா. ராமர், இரா. ரமேஷ், பீட்டர், மாவட்ட துணைச் செயலர் தா. ஏஞ்சலா, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் கௌ. இந்துமதி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குரூப்-4 தேர்வு குளறுபடிகளுக்கு தமிழ்நாடு அரசே பொறுப்பு : மறுதேர்வு நடத்த சீமான் வலியுறுத்தல்!!
செவ்வாய் 15, ஜூலை 2025 8:20:28 PM (IST)

வண்டலூர் பூங்காவில் அனகோண்டா பாம்பு 10 குட்டிகள் ஈன்றது: ஊழியர்கள் மகிழ்ச்சி!
செவ்வாய் 15, ஜூலை 2025 5:21:16 PM (IST)

திமுகவின் தேர்தல் யுக்திக்கு அரசின் நிர்வாகத்தை பலி கொடுக்கலாமா? த.மா.கா. விமர்சனம்
செவ்வாய் 15, ஜூலை 2025 4:57:10 PM (IST)

அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை மாணவர் சேர்க்கை: கால அவகாசம் நீட்டிப்பு!
செவ்வாய் 15, ஜூலை 2025 4:50:38 PM (IST)

கொலை வழக்கில் ஜாமீனில் வந்த தூத்துக்குடி வாலிபர் படுகொலை... சேலத்தில் பயங்கரம்!!
செவ்வாய் 15, ஜூலை 2025 3:16:01 PM (IST)

கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராஜர் 123–வது பிறந்தநாள் விழா: அமைச்சர் மரியாதை
செவ்வாய் 15, ஜூலை 2025 12:46:03 PM (IST)
