» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பள்ளி மாணவர்களை காலால் எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்ட்!
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 12:08:26 PM (IST)
மேட்டூர் அருகே கால்பந்து போட்டியில் சரியாக விளையாடவில்லை என்று கூறி மாணவர்களை காலால் எட்டி உதைத்த உடற்கல்வி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் முதல் பாதியில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் சரிவர விளையாடாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை, மாணவர்களை தரையில்அமர வைத்து கடும் வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும், மாணவர்களை ஷூ காலால் ஆவேசமாக எட்டி உதைத்து, கன்னத்தில் அறைந்துள்ளார்.
அப்போது, பள்ளி ஆசிரியர்களும் உடன் படிக்கும் ஏராளமான மாணவர்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். இதனால் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுதபடி இருந்தனர்.2-ம் பாதியில் சிறப்பாக ஆடினர்: இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதை செல்போனில் பார்த்த பெற்றோர் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ஆனால், இறுதிப் போட்டியில் 2-ம் பாதியில் சிறப்பாக ஆடி கொளத்தூர் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கபீரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: உடற்கல்வி ஆசிரியர் மாணவர்களை தாக்கியது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் உடற்கல்வி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் : புகாரளிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு
வெள்ளி 17, அக்டோபர் 2025 5:49:58 PM (IST)

ஆணவப் படுகொலைகளை தடுக்க ஆணையம் : பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வெள்ளி 17, அக்டோபர் 2025 5:16:40 PM (IST)

மதுரை மேயரின் ராஜினாமா தீர்மானம் ஏற்பு: 5 நிமிடங்களில் மாநகராட்சி கூட்டம் நிறைவு
வெள்ளி 17, அக்டோபர் 2025 5:10:07 PM (IST)

தி.மு.க.வின் உருட்டுக்கடை அல்வா: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:54:21 PM (IST)

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட அனைத்து அவசர உதவிகளுக்கு ஒரே எண்!!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:47:49 PM (IST)

நெல்லை, தூத்துக்குடி, குமரி உட்பட உள்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:32:24 PM (IST)
