» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காலி மருத்துவப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
வியாழன் 5, செப்டம்பர் 2024 12:46:55 PM (IST)
தமிழகத்தில் காலியாக உள்ள அனைத்து மருத்துவப் பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்த நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க. ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் உள்ளன. மக்கள் என்னும் சிங்கங்கள் அமைதியாக, பொறுமையாக இருப்பது இயலாமையால் அல்ல. சிங்கங்கள் பாயும் நாள் வரும், நாட்டாமை செய்யும் நரிகள் ஓட்டம் பிடிக்கும் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இன்றைய தேதியில் சுமார் 2,600 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்கள் காலியாக உள்ளது என்றும், செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்கள் என்று ஆயிரக்கணக்கான மருத்துவப் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் செய்திகள் தெரிய வருகிறது. மேலும், பல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வர் பதவியை நியமிக்க இயலவில்லை எனில் மருத்துவக் கல்லூரிகளை திறப்பது ஏன்? என்று ஒரு வழக்கு விசாரணையின்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏற்கெனவே அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
எனவே, உடனடியாக விடியா தி.மு.க. அரசு தமிழகத்தில் காலியாக உள்ள அனைத்து மருத்துவப் பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏஐ தொழில்நுட்பம் இல்லாத துறையே இல்லை : கனிமொழி எம்பி பேச்சு
திங்கள் 14, ஜூலை 2025 8:45:26 PM (IST)

தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!
திங்கள் 14, ஜூலை 2025 5:49:00 PM (IST)

காப்புரிமை விவகாரம்: நடிகை வனிதா விஜயகுமார் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 14, ஜூலை 2025 4:38:44 PM (IST)

இபிஎஸ் ஒப்புக் கொண்டால் நிபந்தனையின்றி அதிமுகவில் இணைவேன் : ஓபிஎஸ் அறிவிப்பு!
திங்கள் 14, ஜூலை 2025 4:24:50 PM (IST)

பள்ளிகளில் ப வடிவ இருக்கையால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்: பாஜக குற்றச்சாட்டு!
திங்கள் 14, ஜூலை 2025 12:57:07 PM (IST)

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவு : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!
திங்கள் 14, ஜூலை 2025 12:17:46 PM (IST)
