» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு? தமிழ்நாடு அரசு விளக்கம்
வெள்ளி 4, அக்டோபர் 2024 5:37:25 PM (IST)
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ம் கட்டத்திற்கு, மத்திய அரசு ரூ.63,246 கோடி நிதி வழங்கியுள்ளதாக பரவும் செய்தி தவறானது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி அளித்தார்.அப்போது பேசிய அவர், சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, மெட்ரோ ரயில் திட்டம் 2ம் கட்டத்திற்கு மத்திய அரசு ரூ.63,000 கோடி நிதி வழங்குவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ம் கட்டத்திற்கு, மத்திய அரசு ரூ.63,246 கோடி நிதி வழங்கியுள்ளதாக பரவும் செய்தி தவறானது என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கு ரூ.7,425 கோடி மட்டுமே. தமிழக அரசின் பங்கு- ரூ.22,228 கோடி, கடன் ரூ.33,593 கோடி பங்கிடப்பட்டுள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ம் கட்டத்திற்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்த நிலையில், தவறான தகவலைப் பரப்பாதீர்கள் என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பராசக்தி படத்தில் எந்த சர்ச்சையும் இல்லை : சிவகார்த்திகேயன்
புதன் 14, ஜனவரி 2026 5:06:41 PM (IST)

பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்வு: அன்பில் மகேஷ் அறிவிப்பு
புதன் 14, ஜனவரி 2026 5:01:38 PM (IST)

அதிமுக சார்பில் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி!
புதன் 14, ஜனவரி 2026 12:53:02 PM (IST)

அனைவரது வாழ்விலும் அன்பு, மகிழ்ச்சி, நலம், வளம் பெருகட்டும்: தமிழிசை பொங்கல் வாழ்த்து!
புதன் 14, ஜனவரி 2026 12:16:48 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள் : நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறப்பு!
புதன் 14, ஜனவரி 2026 8:55:08 AM (IST)

ஆசிரியர் சங்க நிர்வாகிகளை விடுவிக்க வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:23:27 PM (IST)

