» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் குரூப் 2 முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 4, அக்டோபர் 2024 9:06:26 PM (IST)
தூத்துக்குடியில் குரூப் 2 மற்றும் 2A முதன்மை தேர்வுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார.
இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மாநில அரசால் அறிவிக்கப்படும் TNPSC, TNUSRB மற்றும் TRB ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் TNPSC Group- II தொகுதி II-ல் துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர்(நிலை-II) உள்ளிட்ட பதவிகளில் 507 பணியிடங்களுக்கும் மற்றும் தொகுதி- IIA-ல் தணிக்கை ஆய்வாளர், முதுநிலை ஆய்வாளர்(கூட்டுறவுத் துறை) உள்ளிட்ட பதவிகளில் 1820 பணியிடங்களுக்கும் அறிவிப்பு 20.06.2024 அன்று வெளியிடப்பட்டது. கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு ஆகும்.
இந்த TNPSC Group- II (தொகுதி II மற்றும் IIA பணிகள்) காலிப்பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வானது (Prelims) 14.09.2024 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
இத்தேர்வு எழுதி முதன்மைதேர்வுக்கு (Mains) தயாராகும் தூத்துக்குடி மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, ஒருங்கிணைந்த இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம் தூத்துக்குடியில் 09.10.2024 (புதன் கிழமை) காலை 10.00 மணிக்கு தொடங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படும். மேலும் வாரம் தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இப்போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் 0461 - 2003251 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. TNPSC Group- II-2024 (தொகுதி II மற்றும் IIA பணிகள்) முதன்மை தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டை உடைத்து 46 பவுன் நகை கொள்ளை - 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது; நகைகள் மீட்பு!
திங்கள் 23, மார்ச் 2026 9:40:44 PM (IST)

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
திங்கள் 23, மார்ச் 2026 5:18:11 PM (IST)

தமிழகத்தில் ‘துரந்தர் 2’ படத்தைத் தடை செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
திங்கள் 23, மார்ச் 2026 5:04:07 PM (IST)

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 ஒதுக்கீடு!
திங்கள் 23, மார்ச் 2026 4:13:03 PM (IST)

வெற்றி பெற வேண்டி குவியும் அரசியல் பிரமுகர்கள் : களைகட்டும் திருச்செந்தூர் முருகன் கோயில்!
திங்கள் 23, மார்ச் 2026 3:44:24 PM (IST)

அனைவரும் திருப்தியடையும் வகையில் தொகுதிப் பங்கீடு அமையும்: பியூஷ் கோயல் உறுதி!
திங்கள் 23, மார்ச் 2026 12:41:53 PM (IST)

