» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதி

திங்கள் 17, பிப்ரவரி 2025 12:46:21 PM (IST)

உடல் நலக்குறைவு காரணமாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நீர்வளத்துறை அமைச்சர் அமைச்சர் துரைமுருகன் (86) சளி மற்றும் காய்ச்சல் தொந்தரவால், சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைமுருகனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து துரைமுருகன் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory