» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்கோ சார்பில் முத்து தாரகை விருதுகள் வழங்கும் விழா

செவ்வாய் 18, மார்ச் 2025 10:39:04 AM (IST)



தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்கோ சார்பில் மாதரே 2025 முத்து தாரகை விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்கோ சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு, முத்து மாநகரின் சாதனை பெண்களை கவுரவிக்கும் "மாதரே 2025" முத்து தாரகை விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் நடனம், பாட்டு, ரங்கோலி, மெஹந்தி, நடிப்பு, ஃபேஷன் ஷோ, பாரம்பரிய சமையல் என பல்வேறு  போட்டிகள் நடைபெற்றன.  

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்கோ வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு தங்கராணி திருநாவுக்கரசு தலைமை வகித்தார். நவஜோதினி அரிராமகிருஷ்ணன், கவுதமி நமச்சிவாயம், வழக்கறிஞர் சொர்ணலதா, டிஎஸ்எப் எம்டி பிரபா ஜோன்ஸ், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் (ஒய்வு) சுப்புலட்சுமி, அரசு மருத்துவமனை டாக்டர்கள் விஜயலட்சுமி, ராஜேஸ்வரி, ராஜ் ஹோட்டல் சுதா சுந்தர்சிங், பொறியாளர் டேபோஸ்லின் ஜெகன், வஉசி கல்லூரி பேராசிரியர் ராஜா தே.பேச்சிமுத்து ஆகிய சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 



ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என 18க்கும் வயதிற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு முத்து தாரகை 2025 விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஃப்ரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி, வாஷிங் மெஷின், டிவி, சேலைகள்  பரிசுகளாக வழங்கப்பட்டன. கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சின்னத்துரை அன்கோ பங்குதாரர்கள் கே.திருநாவுக்கரசு, எஸ்.அரிராமகிரஷ்ணன், டி.நமசிவாயம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory