» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமரி மாவட்டம் 5 வது இடம்பெற்று சாதனை : ஆட்சியர் வாழ்த்து
வெள்ளி 9, மே 2025 10:12:02 AM (IST)
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாடு அளவில் கன்னியாகுமரி மாவட்டம் 5வது இடம்பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வாழ்த்துக்களை தெரிவித்தார்/
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கையில்- 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தமிழ்நாடு அரசுத்தேர்வுகள் இயக்ககத்தால் வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் 7,29,494 மாணவ மாணவியர்கள் 12ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்கள்.
நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 12ம் வகுப்பு படித்த 10,534 மாணவர்களும், 11,408 மாணவிகளும் என மொத்தம் 21,942 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினார்கள். அதில் 10,027 மாணவர்களும், 11,260 மாணவியர்களும் என மொத்தம் 21,287 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்று தமிழ்நாடு அளவில் 97.01 சதவீதம் பெற்று 5வது இடம் பெற்றுள்ளது.
மேலும் அரசு பள்ளிகளில் 2964 மாணவர்களும், 2972 மாணவிகளும் என மொத்தம் 5936 மாணவ மாணவியர்கள் எழுதியுள்ளார்கள். அதில் 2735 மாணவர்களும், 2908 மாணவிகளும் என மொத்தம் 5643 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்று 95.06 சதவீதம் பெற்று தமிழ்நாடு அரசுப்பள்ளிகள் அளவில் நமது மாவட்டம் 4 வது இடம் பெற்றுள்ளது மிகவும் பெருமைக்குரியது.
கடந்த கல்வியாண்டில் (2023-2024) 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் நமது கன்னியாகுமரி மாவட்டம் 14 வது இடம் பெற்றிருந்தது. தற்போது நமது மாவட்டம் தமிழ்நாடு அளவில் 97.01 சதவீதம் பெற்று ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது. தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதற்காக சிறப்பாக பணியாற்றிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கல்வி, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மாணவ மாணவியர்களுக்கு உறுத்துணையாக இருந்து ஊக்கப்படுத்திய பெற்றோர்களுக்கும் என பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதே நேரத்தில் வெற்றி வாய்ப்பினைத் தவறவிட்ட மாணவ மாணவியர்களுக்கு போதியப் பயிற்சி அளித்து, மாணவர்கள் மறு தேர்வு எழுதி வெற்றி பெற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் வாயிலாக வழிவகை செய்யப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப, தெரிவித்துள்ளார்கள்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கன்னியாகுமரி மாவட்டம் 12ம்வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் வாயிலாக அந்தஅந்தப் பள்ளியில் போதிய பயிற்சி அளித்து, மாணவர்களிடையே நம்பிக்கை உரையாற்றி அவர்களை உற்சாகப்படுத்தி, படிக்க வைத்தார்கள்.
மேலும் கடந்த ஆண்டு 14வது இடத்தில் இருந்து தற்போது 5 வாது இடத்திற்கு தேர்ச்சி விகிதம் உயர உழைத்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கல்வி, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கல்வித்துறையினர், பொதுமக்கள், தன்னார்வலர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
வெள்ளி 9, மே 2025 4:00:54 PM (IST)

தூத்துக்குடி என்.டி.பி.எல். ஊழியர்கள் 23வது நாளாக ஸ்ட்ரைக் : மின் உற்பத்தி முற்றிலும் பாதிப்பு
வெள்ளி 9, மே 2025 11:25:02 AM (IST)

கண்ணீர் வேண்டாம் தம்பி!.. இரு கைகளை இழந்த மாணவனின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்!
வியாழன் 8, மே 2025 5:31:15 PM (IST)

குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 8, மே 2025 5:15:12 PM (IST)

அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிப்பு ஏன்? - பரபரப்பு தகவல்கள்
வியாழன் 8, மே 2025 12:47:45 PM (IST)

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 8, மே 2025 12:03:27 PM (IST)
