» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பெரியார் அண்ணாவை விமசிப்பதா? ஓபிஎஸ் கண்டனம்!
புதன் 25, ஜூன் 2025 11:13:36 AM (IST)
முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பெரியார், அண்ணாவை விமர்சித்து வீடியோ வெளியிட்டது கண்டனத்திற்குரியது என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் கொள்கைக்கு மாறான ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றபோது அதனை எதிர்த்து, பேரறிஞர் அண்ணாவின் பெயரில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தொடங்கி, கட்சியின் கொடியில் அவரது உருவத்தைப் பொறித்து, தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாட்டில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியினை அமைத்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து, போறிஞர் அண்ணா காட்டிய வழியில் நான்கு முறை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அமைத்தவர் ஜெயலலிதா. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழக மக்களால், மக்கள் சக்தியை தன்னகத்தே கொண்ட எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் மதிக்கப்பட்ட, போற்றப்பட்ட தலைவர்கள் தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோர். நாங்களும் அந்த வழியைப் பின்பற்றி கொண்டு வருபவர்கள்தான்.
தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை உருவாக்கிய தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகிய இருபெரும் தலைவர்களை விமர்சித்து 'முருக பக்தர்கள் மாநாடு' என்ற போர்வையில் இந்து முன்னணி வீடியோ வெளியிட்டது கடும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக் கொலை: கணவர் வெறிச்செயல்!!
வெள்ளி 4, ஜூலை 2025 11:36:36 AM (IST)

அஜித்குமாரின் உடலில் 50 இடங்களில் காயங்கள் : பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 11:19:18 AM (IST)

வகுப்பறையில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு பள்ளி ஆசிரியர் கைது
வெள்ளி 4, ஜூலை 2025 10:58:15 AM (IST)

கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வெள்ளி 4, ஜூலை 2025 10:40:08 AM (IST)

திருச்செந்தூரில் குடமுழுக்கு விழா முன்னேற்பாடு பணிகள் : கனிமொழி எம்.பி., ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 7:57:02 AM (IST)

திமுக ஆட்சி கட்டுப்பாட்டில் இல்லாமல் தறிகெட்டு ஓடுகிறது: கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு
வியாழன் 3, ஜூலை 2025 7:46:42 PM (IST)

டயர் கும்பிடுJun 25, 2025 - 02:43:55 PM | Posted IP 104.2*****