» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக - பாஜக கூட்டணிக்கு டெபாசிட் கூட கிடைக்காது: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

ஞாயிறு 13, ஜூலை 2025 6:30:36 PM (IST)



தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார் 

திருவண்ணாமலையில் நடக்கும் பூத் முகவர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இ.பி.எஸ். போல் அமித்ஷா வீட்டு கதவை திருட்டுத்தனமாக தட்டவில்லை. மக்களின் வீட்டு கதவுகளை உரிமையோடு தட்டுகிறது தி.மு.க. அமித்ஷா வீட்டு கதவையோ, கமலாலயத்தின் கதவையோ தட்டாமல் மக்களின் வீட்டு கதவுகளை உரிமையோடு தட்டுகிறது தி.மு.க.

எடப்பாடி பழனிசாமி ஓடி ஒளிந்து பா.ஜ.க.வுடன் கள்ள கூட்டணி வைத்த நிலையில் அதில் ஒற்றுமை இல்லாத சூழல் உள்ளது. அண்ணா பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு அமித்ஷாவிடம் அடகு வைக்கப்பட்டு விட்டது அ.தி.மு.க. கோவில் பணத்தில் கல்லூரி கட்டலாமா எனக்கேட்டு முழு சங்கியாகவே எடப்பாடி பழனிசாமி மாறி விட்டார்.

வரும் சட்டசபை தேர்தலில் அடிமைகளையும் பாசிஸ்டுகளையும் தமிழக மக்கள் ஒருசேர வீழ்த்துவார்கள். அவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு பாதை போட்டு கொடுக்கிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.தேர்தல் களத்தில் தி.மு.க. முந்துவதால் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதற்றம் வந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் வெள்ளை வேட்டி சட்டையில் தொடங்கி காவி நிறத்திற்கு மாறி விட்டது.இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory