» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆயுத பூஜை, விஜயதசமி : இரயில் டிக்கெட் முன்பதிவு 60 நாட்களுக்கு முன்பாக துவக்கம்!

புதன் 16, ஜூலை 2025 3:54:25 PM (IST)

ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 60 நாட்களுக்கு முன்பாகவே இரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.

கீழ்க்காணும் தேதிகளில் இரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.

ரயில் டிக்கெட் முன்பதிவு நாள் - பயண நாள் பயண கிழமை

ஆகஸ்ட் 1 - செப்டம்பர் 30 செவ்வாய் 

ஆகஸ்ட் 2 -  அக்டோபர் 1 புதன் ( ஆயுத பூஜை) 

ஆகஸ்ட் 3 -  அக்டோபர் 2 வியாழன் ( விஜய தசமி) 

ஆகஸ்ட் 4 -  அக்டோபர் 3 வெள்ளி

ஆகஸ்ட் 5 -  அக்டோபர் 4 சனிக்கிழமை 

ஆகஸ்ட் 6 -  அக்டோபர் 5 ஞாயிறு 

ஆகஸ்ட் 7 -  அக்டோபர் 6 திங்கள் 

வட இந்திய ரயில்களுக்கு முன்பதிவு தேதியில் 1 அல்லது 2 நாட்களுக்கு மாறுதல்கள் ஏற்படும்.

முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கவும். காலை 8 மணிக்கு அனைத்து வகுப்புகளுக்கான முன்பதிவு துவங்கும்.ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறவர்கள், ரயில் கால அட்டவணையின்படி, திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory