» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீர்தேக்கத்தில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு மானிய விலையில் பரிசல்: ஆட்சியர் வழங்கினார்.

திங்கள் 1, செப்டம்பர் 2025 4:27:03 PM (IST)



பேச்சிப்பாறை மற்றும் சிற்றார் நீர்தேக்கத்தில் மீன்பிடிக்கும் பங்கு மீனவர்களுக்கு மானிய விலையில் பரிசல்களை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா  வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை மற்றும் சிற்றார் நீர்தேக்கத்தில் மீன்பிடிக்கும் பங்கு மீனவர்களுக்கு மானிய விலையில் பரிசல்களை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வழங்கி தெரிவிக்கையில் - தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க 2024-25 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மானியக் கோரிக்கையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்களால் உள்நாட்டு மீனவர்களுக்கு மானியத்தில் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையால் 2024-25-ம் ஆண்டு மாநில நிதி திட்டத்தின் கீழ் உள்நாட்டு மீனவர்களுக்கு 50 விழுக்காடு மானியத்தில் மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு பரிசலுக்கு ரூ.9,250/- வீதம் பேச்சிப்பாறை நீர்தேக்கத்தில் 10 பங்கு மீனவர்களுக்கும், சிற்றார் நீர்தேக்கத்தில் 10 பங்கு மீனவர்களுக்கு என மொத்தம் ரூ.1.85 இலட்சம் மானியத்தில் 20 பயனாளிகளுக்கு பரிசல்கள் வழங்கப்பட்டது. இதன்மூலம் பங்குமீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார். 

இந்நிகழ்வில் துணை இயக்குநர் (மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை) சின்னக்குப்பன், உதவி இயக்குநர் விர்ஜில் கிராஸ்(நாகர்கோவில்), அஜித் ஸ்டாலின் (குளச்சல்) வட்டார வளர்ச்சி அலுவலர், பங்கு மீனவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory