» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்!
புதன் 10, செப்டம்பர் 2025 4:02:00 PM (IST)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு கடைகள் நடத்த கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்து வருகிறது. இந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த 2008 வெடிபொருள் விதிகள் மற்றும் 1884 வெடிபொருள் சட்டத்தின் கீழ் தற்காலிக பட்டாசு உரிமம் கோரி மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் வருகிற 10.10.2025-ந்தேதிக்கு முன்னதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்களில் குறிப்பிட்ட ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
அனுமதி வேண்டி விண்ணப்பிப்பவர்கள், மனை வரைபடம், கடை அமையவிருக்கும் இடத்தின் வரைபடம், கடை அமையவிருக்கும் இடத்தின் பட்டா மற்றும் ஆவணங்களுடன், உரிய கணக்கு தலைப்பின் கீழ் (Head of Account: 0070-other Administrative services 60-other services 103 Receipts under Explosive Act 01 Collector of Distric Authorities E-challan code no. 0070-60-109-AA-22738) அரசு கணக்கில் தற்காலிக பட்டாசு உரிமக்கட்டணம் ரூ.500/-ஐ பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்தியதற்கான அசல் ரசீதினை (செலான்) இணைக்க வேண்டும்.
மேலும் மனுதாரர் தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளர் என்றால் அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதி ஆண்டின் சொத்து வரி செலுத்திய ரசீது நகல், வாடகை கட்டிடம் என்றால் வரி செலுத்திய ரசீது நகலுடன் இடத்தின் உரிமையாளரிடம் ரூ.20/-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் சம்மத கடிதமும் விண்ணத்தாரரின் புகைப்படம், முகவரி சான்று உள்ளிட்டவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் நிர்வாக காரணங்கள் முன்னிட்டு வருகிற 10.10.2025-ம் தேதிக்குள் தற்காலிக பட்டாசு உரிமம் கோரி வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டும பரிசீலனை செய்யப்படும். அக்டோபர் 10-ம் தேதிக்கு பின்னர் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேங்காப்பட்டணம், குளச்சல் கடற்கரை பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர்கள் ஆய்வு!
திங்கள் 8, ஜூன் 2026 8:41:33 PM (IST)

எடப்பாடி பழனிசாமியுடன் தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் திடீர் சந்திப்பு!
திங்கள் 8, ஜூன் 2026 5:39:11 PM (IST)

மீனவர்களின் பிரச்சனைகளுக்கு முதலமைச்சர் விஜய் அரசு தீர்வு காணும்: அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் உறுதி!
திங்கள் 8, ஜூன் 2026 5:27:22 PM (IST)

ஆட்சி மாறினாலும் அவலங்கள் மாறவில்லை : டியூபர் மாரிதாஸ் கைது: அதிமுக, பாஜக கண்டனம்
திங்கள் 8, ஜூன் 2026 4:38:45 PM (IST)

குமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
திங்கள் 8, ஜூன் 2026 4:23:02 PM (IST)

தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலக ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
திங்கள் 8, ஜூன் 2026 3:54:34 PM (IST)


