» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தீயணைப்புத்துறையை வலுப்படுத்துவது மிக முக்கிய பணியாகும் : ஆட்சியர் க.இளம்பகவத் பேச்சு!

புதன் 10, செப்டம்பர் 2025 5:01:06 PM (IST)



பேரிடர் நிர்வாகத்தின் மிக முக்கிய பங்காற்றக்கூடிய தீயணைப்புத்துறையை வலுப்படுத்துவது மிக முக்கிய பணியாகும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்  க.இளம்பகவத் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் இன்று தீயணைப்பு - மீட்புப்பணிகள் துறை சார்பாக வடகிழக்கு பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் நீர்நிலைகள் மற்றும் வெள்ளக் காலங்களின் போது மீட்புப்பணிகள் தொடர்பான ஒத்திகை பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்ததாவது : தூத்துக்குடி மாவட்டத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பாக பேரிடர் காலங்களில் வெள்ள சூழ்நிலை ஏற்படுகின்ற பொழுது பொதுமக்களை பாதுகாப்பதற்கும், அவர்களை மீட்டுக் கொள்வதற்குமான செயல் விளக்க ஒத்திகை காட்சி நிகழ்ச்சியை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர்கள் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் செய்து காண்பித்தனர். 

இதில் பொதுமக்களுக்கு, வெள்ளத்திலிருந்து எவ்வாறு தப்பித்து மீண்டு வருவது? ஆபத்து காலத்தில் மக்களை எப்படி பாதுகாப்பது? உள்ளிட்ட பல செயல் விளக்கங்களை செய்து காண்பித்தனர். பள்ளி மாணவர்களுக்கும் ஒத்திகை பயிற்சியினை காண்பித்து அவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பேரிடர்களை எதிர்கொள்வதற்காக சுமார் ரூ.20 இலட்சம் மதிப்பிலான பல்வேறு வகையாக மீட்பு உபகரணங்களை தீயணைப்புத் துறைக்கு பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து அளிக்கப்பட்டுள்ளது. அதில் படகு, லைபாய் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பொருட்களையும் தீயணைப்பு வீர்ர்கள் இருப்பில் வைத்துள்ளனர். தேவைப்படும் இடத்தில் செயல்படுத்துவதற்கு தயார் நிலையில் இருக்கின்றனர். பேரிடர் நிர்வாகத்தின் மிக முக்கிய பங்காற்றக்கூடிய தீயணைப்புத்துறையை வலுப்படுத்துவது மிக முக்கிய பணியாகும் என்றார்.

மேலும், கண்மாய் மற்றும் ஊரணிகளில் தடுப்புச்சுவர் தேவைப்படும் இடங்களில் பொதுப்பணித்துறையினரால் அளவீடு செய்யப்பட்டு கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதியதாக தேவைப்படும் இடங்களில் அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாய்க்கால்களில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகள் நிறைவு செய்யும் நிலையில் உள்ளது. குளங்களை தூர்வாருதல் என்பது நீர்பிடிப்புகள் மற்றும் நீர்வளத்தை அதிகப்படுத்துவதற்கான முக்கிய செயல்பாடு. நீர் கொள்ளளவினை அதிகப்படுத்துவதற்கும் குளங்கள் தூர்வாருதல் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் தீயணைப்பு - மீட்புப்பணிகள் துறை சார்பாக வடகிழக்கு பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் நீர்நிலைகள் மற்றும் வெள்ளம் ஏற்படும் போது, பொது மக்கள் தற்காலிக கயிற்றுப் பாலம் வழியாக பத்திரமாக செல்லக்கூடியதையும், கயிற்றின் மூலம் தீயணைப்பு வீரர்கள் சென்று மயங்கிய நபரை கயிற்றின் வழியாக மீட்டு வருவதையும், வெள்ளநீரில் சிக்கிய நபரை லைபாய் மூலமாக தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருவதையும், வெள்ளநீரில் சிக்கிய ஆட்டுக்குட்டியினை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருவதையும், வெள்ளநீரில் சிக்கிய நபரை ஸ்ரெட்சர் மூலமாக மீட்டு வருவதையும், வெள்ளநீரில் மூழ்கிய நபரை ஸ்கூபா டைவிங் பயிற்சி பெற்ற தீயணைப்பு வீரர்கள் மூலமாக மீட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பார்வையிட்டார்.


இந்நிகழ்வில் மாவட்ட தீயணைப்பு – மீட்புப்பணிகள் துறை அலுவலர் க.கணேசன், திருவைகுண்டம் வட்டாட்சியர் ரத்தின சங்கர், தீயணைப்பு – மீட்புப்பணிகள் துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory