» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கோவிலில் புரட்டாசி கிருத்திகை விழா: தங்கத்தேரில் ஜெயந்திநாதர் வீதி உலா!

சனி 11, அக்டோபர் 2025 8:17:42 AM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கிருத்திகையை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி கிருத்திகையை முன்னிட்டு நேற்று சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவரான முருகர், வள்ளி, தேவசேனா சமேத சண்முகரை திரளான பக்தர்கள் காத்திருந்து வழிபட்டனர். முன்னதாக அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடந்தன. 

மாலையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தேவசேனா அம்மனுடன் 108 மகாதேவர் சந்நிதியில் எழுந்தருளினார். அங்கு, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதர் தங்கத்தேரில் எழுந்தருளி கிரி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை தக்கார் அருள்முருகன், இணை ஆணையர்  ராமு, கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory