» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் ஒருவர் பலி : கர்ப்பிணி பெண் படுகாயம்!

சனி 11, அக்டோபர் 2025 8:53:52 AM (IST)

கயத்தாறு அருகே பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் மாமனார் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கர்ப்பிணி மருமகள் படுகாயம் அடைந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள திருமங்களக்குறிச்சி தெற்கு தெருவில் வசித்து வந்தவர் வெங்கடாசலம்(60). இவர், கயத்தாறு-கழுகுமலை ரோடு ஓரத்தில் மோட்டார் வாகனங்களுக்கான பஞ்சர் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு சிவன்பெருமாள், செந்தில்குமார் ஆகிய 2 மகன்களும், சுடலைவடிவு, மாதவி என்ற 2 மகள்களும் உள்ளனர்.

இதில் விவசாயியான சிவன்பெருமாள் மனைவி சரோஜினி (27). இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் சரோஜினி மாமனாரை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக மொபட்டில் பஞ்சர் கடைக்கு சென்றார். பின்னர் கடையை பூட்டிவிட்டு வெங்கடாசலம் மருமகளுடன் மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். மொபட்டை சரோஜினி ஓட்டிச்செல்ல வெங்கடாசலம் பின்னால் அமர்ந்து சென்றார்.

கயத்தாறு-கழுகுமலை ரோட்டில் இருந்து திருமங்களக்குறிச்சி பிரிவு சந்திப்பு ரோட்டை கடப்பதற்கு முயன்றபோது வாகனங்கள் சென்றதால், மொபட்டை நிறுத்தியுள்ளார். அப்போது பின்னால் வந்த டிராக்டர் திடீரென மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மொபட்டிலிருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு 2பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே வெங்கடாசலம் பரிதாபமாக இறந்து போனார். சரோஜினி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory