» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தொழில்வாரியான நலவாரியங்களை பாதுகாக்க சிறப்பு சட்டம்: அமைப்புசாரா தொழிலாளர்கள் கோரிக்கை!

திங்கள் 13, அக்டோபர் 2025 12:12:22 PM (IST)



சட்டமன்றக் கூட்டத்தொடரில் தொழில்வாரியான நலவாரியங்களை பாதுகாக்க, சிறப்பு சட்டம் அல்லது சிறப்புக் கொள்கை வகுக்க வேண்டும் என்று அமைப்புசாரா தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "மத்திய அரசின் 44 தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்து, கொண்டு வரப்பட்ட 4 தொகுப்பு சட்டங்களையும் திரும்ப பெற்று ஏற்கனவே இருந்த கட்டுமான, பீடி, தோட்டங்கள் போன்ற தொழிலாளர்களுக்கான துறை வாரியான சட்டங்கள் மீட்கப்பட வேண்டும். 

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர் சட்டம் 1982யும் அதன் கீழ் இயங்கும் 18 நலவாரியங்களையும், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் மற்றும் விவசாயிகள் நல சட்டம் 2007 - விவசாயத் தொழிலாளர் நலவாரியம், தமிழ்நாடு மீன் மற்றும் மீன் சார்பு தொழிலாளர் நல சட்டம் 2007 மீனவர் நலவாரியம், மற்றும் பிற துறைகளில் இயங்கும் கலைஞர் தொடங்கிய 36 நலவாரியங்களையும் பாதுகாக்கும் அறிக்கையை தீர்மனமாக நிறைவேற்ற வேண்டும். 

வீட்டுவேலை, பொது வளங்களில் பணியாற்றுவோர், விவசாய தொழிலாளர்கள், இல்லங்களில் இருந்து பணிபுரிபவர் தவிர பொதுவான அமைப்புசாரா தொழிலாளர்கள் என 5 புதிய மத்திய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். தொழிலாளர் துறை இதர துறைகளிலும் இயங்கும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நலவாரியங்களுக்கும் ஜீஎஸ்டியில் (GST) ஒரு சதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். 

மத்திய மாநில பட்ஜெட்களில் 3% அமைப்புசாரா தொழிலாளர் சமூகப் பாதுகாப்புக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆ) கட்டுமான தொழிலாளர் நலவாரியத்திற்கு 1 -2 சதம் லெவி, ஓட்டுனர் நலவாரியத்திற்கு சாலை வரியில் 1 சதம், வீட்டுவேலை தொழிலாளர்களுக்கு வீட்டுவரியில் 1 சதம் என ஒவ்வொரு வகை தொழிலாளிக்கும் லெவி முறை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory