» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 நேரடி சேர்க்கை: அக்.17 வரை விண்ணப்பிக்கலாம்!

செவ்வாய் 14, அக்டோபர் 2025 4:03:48 PM (IST)

நாகர்கோவில் SMRV அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கைக்கு அக்.17 வரை வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆட்சியர் ஆர்.அழகுமீனா வெளியிட்ட செய்திக் குறிப்பில், "SMRV அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 நேரடி சேர்க்கை 17.10.2025 வரை நடைபெறும். குறைந்த பட்ச கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி (ஆடை தயாரித்தல் தொழிற்பிரிவு மட்டும்) மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் குறைந்தபட்ச வயது வரம்பு 15 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

தகுதிவாய்ந்த மாணவிகள் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளான 1.)கம்மியர் மின்னணுவியல் , 2). டெஸ்க் டாப் பப்பிளிசிங் ஆப்ரேட்டர், 3). கம்யுட்டர் ஆப்ரேட்டர் மற்றும் புரோகிராம் அசிஸ்டெண்ட். 4). ஆடை தயாரித்தல், 5). சுருக்கெழுத்து மற்றும் செயலக பணி உதவியாளர்(ஆங்கிலம்), 6) நவீன ஆடை வடிவமைப்பு தொழிற்நுட்பம், 7). மருத்துவ மின்னணுவியல் நுட்பவியலாளர், 8). கட்டிடக்கலை படவரைவாளர் ஆகிய தொழிற்பிரிவில் சேர்ந்து பயிற்சி பெறலாம். பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம்.

மாணவிகள் தொழிற்பயிற்சிக்கான நேரடி சேர்க்கைக்கு 17.10.2025 வரை SMRV அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), வேப்பமூடு ஜங்சன் அருகில், நாகர்கோவில் நேரில் வந்து சேரலாம்.

பயிற்சி பெறுபவர்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன் மிதிவண்டி, சீருடை தையல்கூலியுடன், பாடபுத்தகங்கள், காலணி, மாதந்தோறும் வருகைக்கேற்ப ரூ.750 உதவித்தொகை மற்றும் கட்டணமில்லா பேருந்து சலுகை வழங்கப்படும். மேலும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் விடுதிகளில் தங்கி பயிற்சி பெற வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.

தமிழக அரசு வழங்கும் உயர் கல்வி உதவித்தொகை ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி (தமிழ்வழிமட்டும்) பயின்ற மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை கூடுதலாக வழங்கப்படும். மேலும் தொழிற்பிரிவில் படிக்கும் போதே பிரபல தொழிற்நிறுவனங்களில் Internship Training உதவி தொகையுடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் ஏற்பாடு செய்து தரப்படும். 10 ஆம் வகுப்பு முடித்த பின்னர் 2 ஆண்டுகள் ஐடிஐ பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் மொழிப்பாடங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மட்டும் எழுதி 12 ஆம் வகுப்பு இணையான மாநில அரசு சான்றிதழ் பெறலாம்.

SMRV அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் சேர்ந்து மாணவிகள் பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு 9499055807,04652-222569, 9688333469, 9095680040, என்ற கைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory