» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சங்ககால வரலாற்று குறிப்புகள் குறித்து பகுப்பாய்வு : அரசுக்கு தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை!
திங்கள் 27, அக்டோபர் 2025 10:39:12 AM (IST)

தொன்மையான சங்ககால வரலாற்று குறிப்புகள் கொண்ட 1778ம் ஆண்டின் வரைபடம் பாதுகாக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி கோரிக்கை விடுத்துள்ளார்.
1778ம் ஆண்டு இராபர்ட் ஓரம் வரைந்த இராணுவ பரிவர்த்தனை வரைபடம் 10ம் நூற்றாண்டிற்கு முந்தைய நிலவியல் வரைபடமா என்பது குறித்து ஆய்வு நடத்த தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க தொல்லியல் துறை, இயக்குநருக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.
அதில் கடற்கரை பகுதிகளான கீழக்கரை, கீழப்பட்டினம், காயல்பட்டினம் கடற்கரை பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள குளங்கள் பாண்டியர்கள் முத்து விளைவிக்க பயன்படுத்திய குளங்களா என்பது குறித்துஆய்வு செய்ய வேண்டும் என்று தூத்துக்குடியைச் சேர்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், "சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னரால் பரளியாற்றின் குறுக்கே அணை கட்டி வெட்டப்பட்ட தோவாளை வாய்கால் எனப்படும் பழையாற்றின் வழித்தடங்கள் மற்றும் கீழமணக்குடி கழிமுகத்துவாரம் குறித்த குறிப்புகள் ஏதும் குறிப்பிடப்படாமல் சங்ககாலத்தில் துறைமுகப்பட்டினமாக விளங்கி தற்போதைய வள்ளியாற்றின் கழிமுகத்துவாரம் பகுதியில் அமைந்தள்ள கடியப்பட்டினம், பழைய எல்லை வரம்பு என்ற சுமார் 7.5கி.மீ நீளம் கொண்டதாக தற்போதைய பொழிக்கரை பூங்காவிலிருந்து உதயமார்த்தாண்டம் பகுதி வரை சற்று வடகிழக்காக கண்டமைக்கப்பட்டிருந்த கோட்டையின் விபரமும், கன்னியாக்குமரியின் கிழக்கே உள்ள கல்விளை கடற்கரை பகுதியில் இருந்து வடமேற்கு திசையில் உள்ள பொட்டல் குளம் பகுதிவரை சுமார் 5.5கி.மீ நீளத்தில் கட்டமைக்கப்பட்டிருந்த புதிய எல்லை வரம்பு எனப்படும் கோட்டையினையும், இறைச்சக்குளம் பகுதியில் இருந்து வடக்கு நோக்கி முக்கடல் அறிவியல் பூங்கா வரை சுமார் 4.0கி.மீ நிளத்திற்கு கட்டமைக்கப்பட்டிருந்த ஓர் கோட்டையினையும் குறிப்பிட்டுள்ளார்.
இது நமக்கு அஞ்சுதெங்கு எனப்படும் முன்பு அஞ்செங்கோ என அழைக்கப்பட்ட திருவனந்தபுரம் பகுதியில் 25.12.1728ல் பிறந்து 1707ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலண்டன் பழங்கால சங்கத்தில் 1770ம் ஆண்டு உறுப்பினராக இணைந்து செயலாற்றிய கிழக்கிந்திய கம்பெனியின் வரலாறு மற்றும் வரைபட அறிஞர் இராபர்ட் ஓரம் 1778ம் ஆண்டு தனது இராணுவ பரிவர்த்தனை ஆவணத்திற்காக மிக துல்லியமாக அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை குறிப்புகளுடன் கொல்லிடம் முதல் கன்னியாகுமரி வரை என்ற தலைப்பில் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு கிழக்கேயுள்ள பகுதிகளை மட்டும் குறிப்பிட்டு வரைந்த இந்த வரைபடத்தின் மீது, ஏன் இவர் நமது முன்னோர்களான பாண்டியர்கள் அல்லது சோழர்களின் குறிப்புகளையோ! வரைபடங்களையோ! பயன்படுத்தி 10ம் நூற்றாண்டிற்கு முற்பட்ட விளக்க விபரங்களை உள்ளடக்கிய வரைபடங்களை வரைந்திருக்க கூடாது என்பதாகும்.
குறிப்பாக இந்த தோவாளை வாய்க்கால் எனப்படும் பாண்டியன்கல் பொ.ஊ 900 - 946 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த 3ம் இராசசிம்மன் காலத்தில் வெட்டப்பட்டது என்ற ஓர் கருத்து பரவலாக அறியப்படுகிறது. இவரது ஆட்சிக்கு பின்னர்தான் சோழர்களின் தொடர் ஆதிக்கம் பாண்டிய நாட்டில் ஆரம்பம் ஆகியது. 9ம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து 11ம் நூற்றாண்டின் பாதிவரை நமது தூத்துக்குடி மாவட்டத்தில் மலட்டாறின் கழிமுகத்துவாரத்தில் அமைந்திருந்த பட்டினமருதூரின் பழைய பெயர் கேரளாந்தகபுரம்(குரங்குடி நாடு) என்பது நெல்லை பகுதியின் சோழர்களின் ஆதிக்கத்தினை பரைசாற்றுகின்றன.
தற்போது மலட்டாறின் வழித்தடம் திசைமாறி தாமிரபரணியோடு ஐக்கியமாகின்றது என்பது அந்த பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய வரலாற்று பேரிடரை நமக்கு உணர்த்துகிறது. மேலும் நமது தூத்துக்குடி மாநகரம் அடிக்கடி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படுவதற்கு மூலகாரணமும் வடக்குப்பகுதியில் ஓடிய நீர் வழித்தடம் இல்லாததுதான் பிரதான காரணியாக அமைகின்றது எனலாம்.

இவர் கன்னியாகுமரிக்கு வட கிழக்கே உள்ள உவரிகடற்கரை பகுதிகளில் உள்ள பிரதான நதியாக திருக்குறுங்குடியில் இருந்து விஜயநாராயணபுரம் வளியே பாயும் நம்பியாற்றின் வழித்தடத்தினையும், களக்காட்டில் இருந்து சிங்கிகுளம் வழியாக பாளையங்கோட்டை வரையுள்ள நதியின் இணைப்பு வழிதடத்தினையும் மிக துல்லியமாக குறிப்பிட்டுள்ளார். மேலும் பணகுடி, திருக்குறுங்குடி, களக்காடு, பாளையங்கோட்டை, பருத்திக்கோட்டை எனப்படும் பருத்திப்பாடு, மூலக்கரைப்பட்டி, நாட்ருடகோட்டை (ஸ்ரீவைகுண்டம்) ஆகிய பகுதிகளில் கோட்டை (அ) கோவில் போன்ற குறிப்புகளை தெளிவாக பதிவேற்றம் செய்துள்ளார்.
இதில் பாளையங்கோட்டையானது சுமார் 2கி.மீ நீள அகலம் கொண்ட சதுர வடிவிலான கோட்டையாகும். மக்கள் தகவல்கள் அடிப்படையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை வ.உ.சி மைதானத்தின் பகுதியில் இருந்து மேலப்பாளையம் வரை ஓர் சுரங்கப்பாதை இருந்ததாகவும் அதன் நீட்சியானது கிருஷ்ணாபுரம் வரை இருப்பதாகவும் அறியப்பட்டது. முறையாக ஆய்வு செய்தால் வரலாற்று உண்மைகள் வெளிவரும்.
இவரின் வரைபடத்தின் துல்லியதன்மையின் உதவியுடன் நமது தமிழக அரசால் இந்த 2025-2026ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பட்டினமருதூர் தொல்லியல் தளத்தின் சுற்றுவட்டார பகுதிகளான தருவைக்குளம், மேலமருதூர், தெற்குகல்மேடு, கல்லாறு-பனையூர், கொல்லன்பரம்ப-முள்ளுர் ஆகிய பகுதிகளில் மக்கள் வாழ்விடங்கள், கடலிலில் மூழ்கியுள்ள தீவுகள், தொழிற்கூடங்கள், புதைவிடங்கள், வழிபாட்டு தளங்கள், புதையுண்ட சாலைகள், மண்ணில் புதையுண்டுள்ள கோட்டை சுவர்கள், போற்றவற்றிற்கான பலவிதமான தொல்லியல் சான்றுகள் மற்றும் உண்மை தரவுகள் கண்டறியப்பட்டு தமிழக தொல்லியல் துறை வசம் மாவட்ட நிர்வாகம் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றில் முக்கியமாக கீழக்கரை, பனையூர்(கீழ்பட்டினம்), காயல்பட்டினம் போன்ற பகுதிகளில் கடற்கரையில் இருந்து சுமார் 4கி.மீ - 8கி.மீ தூரத்திற்கு அப்பால் குறிப்பிடப்படும் சுமார் 4.0கி.மீ முதல் 6.0கி.மீ வரை அகலம் கொண்டதாக ஒழுங்கற்ற வடிவில் வெட்டப்பட்ட கடல் நீர் உட்புகும் கால்வாயோடு, நண்ணீர் உற்று மற்றும் கால்வாய் உள்ள பகுதிகளில் காணப்பட்ட குளங்களின் அமைவிடப் பகுதிகளில் ஒன்றான பட்டினமருதூர் அருகே உள்ள பனையூர் கிராமத்தில் தடுப்பணை பகுதியில் மண்ணில் புதைந்துள்ள பல வகையான கடல்சார் சிப்பிகளின் படிம எச்சங்கள் குறிப்பாக ‘மகலான பிளினேட்டா’ எனப்படும் முத்துக்களின் பல்வெறு அளவிலான எச்சங்கள்(அதிகபட்சமாக 175மி.மீ நீளம் கொண்டது) ஆகியவற்றின் வாயிலாக இத்தகைய குளங்கள் மூலம் நம் முன்னோர்கள் முத்துக்களை வளர்த்து வந்திருக்ககலாமா! என்ற புதிய விஞ்ஞான பார்வையினை நமக்கு தருகின்றன.
எனவே இத்தகைய சிறப்பு வாய்ந்த கொல்லிடம் - கன்னியாகுமரி, பென்னார் - கொல்லிடம் இரண்டு தலைப்புகளில் திரு.இராபரட் ஓரம் தனது இராணுவ பரிவர்த்தனை 1781ம் ஆண்டு ஆவணத்திற்காக வரைந்துள்ள வரலாற்று வரைபடங்களையும் அந்த ஆவணத்தினையும் வரலாறு மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள், ஆர்வலர்கள், மாணவர்கள் நன்கு பயன்படுத்தி அறிவியல் பூர்வாக அட்சரேகை மற்றும் தீர்க்க ரேகை அடிப்படையில் நன்கு பகுப்பாய்வு செய்து நமது மூவேந்தர்களின் மறைந்துள்ள மற்றும் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிகொணர தூத்துக்குடியினை சேர்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி தனது கோரிக்கைகளை பதிவு செய்தார். இந்த மனுமீது உரிய நடவடிக்கை எடுக்க தொல்லியல் துறை, இயக்குநருக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.
தோவாளை நீர் வாய்க்கால்:
தோவாளை நீர் வாய்க்கால், பரளியாற்றின் குறுக்கே உள்ள இந்த அணைக்கட்டு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டில் இருந்து, பாண்டியங்கல் என்ற வாய்க்கால் தோண்டப்பட்டு, பழையாறுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. அகஸ்தீஸ்வரம் மற்றும் தோவாளையில் உள்ள நிலங்கள் இந்த அணைக்கட்டின் மூலம் பயனடைந்தன.
தோவாளை வாய்க்காலுக்கு குறிப்பிட்ட மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை என்றாலும், கட்டுமானம் பாண்டியர் சகாப்தத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. பாண்டிய மன்னர்கள், வரலாற்று ரீதியாக வளமான ஆனால் வறண்ட பகுதிகளான அகஸ்தீஸ்வரம் மற்றும் தோவாளை தாலுகாக்களில் விவசாயத்திற்கு நீர் வழங்குவதற்காக பாண்டியன் அணை மற்றும் பாண்டியன் கல் ஆகியவற்றைக் கட்டினார்கள்.
மரபு: "பாண்டியன் அணை" மற்றும் "பாண்டியன் கல்" என்ற பெயர்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன, இது நீர்ப்பாசன முறையை உருவாக்கிய பண்டைய பொறியியல் பணிகளை ஒப்புக்கொள்கிறது. புத்தன் அணை பல ஆண்டுகளாக, பாண்டியன் அணைக்கட்டு வண்டல் படிந்து பயனற்றதாக மாறியது. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, வேணாட்டு மன்னர் மார்த்தாண்ட வர்மா காலத்தில், பாண்டியன் அணைக்கட்டுக்குக் கீழே சுமார் 400 மீட்டர் தொலைவில் பரலியார் ஆற்றின் குறுக்கே புத்தன் அணைக்கட்டு என்ற புதிய அணைக்கட்டு கட்டப்பட்டது.
இந்த அணைக்கட்டு ஒரு மாற்றுப்பாதை ஆகும், இதிலிருந்து கல்குளம் தாலுகாவில் உள்ள நிலங்களுக்கு உணவளிக்கும் பத்மநாபபுரம் புத்தனார் கால்வாய் தோண்டப்பட்டது. பட்டணம்கல் அணைக்கட்டு பகுதி முழுவதும் நீர்ப்பாசனப் பகுதிக்கான நீராக கோதையாறு படுகை நீர்ப்பாசன முறை தொடர்பான முக்கிய புள்ளி புத்தன் அணை ஆகும். புத்தன் அணைக்கட்டு பகுதி புத்தன் அணையிலிருந்து பி.பி. கால்வாய் மற்றும் பாண்டியன்கல் வழியாக எடுக்கப்படுகிறது
பழையார்: பழையார் படுகை, தோவாளை மற்றும் அகஸ்தீஸ்வரம் தாலுகாக்களில் அமைந்துள்ளது. பழையார் ஆறு மகேந்திரகிரி மலைகளின் தெற்குப் பகுதியில் இருந்து உருவாகிறது. இது சுமார் 35 கி.மீ. தெற்கு நோக்கி ஓடி, அகஸ்தீஸ்வரம் தாலுகாவின் தாமரைக்குளம் கிராமத்தில் உள்ள மணக்குடி அருகே அரபிக்கடலில் கலக்கிறது. பிற துணை நதிகள் ஆலத்துரையார், பொய்கையார், தடவயர். கோயாஓடை மற்றும் உலகக்கருவியர். பழையார் அனந்தனார் மற்றும் தோவாளை வாய்க்கால்களின் அணைக்கட்டுக்கான முக்கிய வடிகால் கேரியராகவும் செயல்படுகிறது.
வள்ளியார்: வெள்ளிமலை மலைகளின் தெற்கு சரிவுகளிலிருந்து, வள்ளியார் மலைகளிலிருந்து உருவாகும் வள்ளியார் ஒப்பீட்டளவில் சிறிய ஆறு. இது தெற்கே சுமார் 16 கி.மீ தூரம் பாய்ந்து கல்குளம் தாலுகாவின் கடியப்பட்டணம் கிராமத்தில் அரபிக்கடலில் கலக்கிறது. இது பி.பி. கால்வாய் அமைப்பிற்கான வடிகால் கேரியராகும். சங்க கால இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட புகழ்பெற்ற துறைமுகங்களில் இதுவும் ஒன்று.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
திங்கள் 27, அக்டோபர் 2025 12:04:26 PM (IST)

மோந்தா புயல்: தூத்துக்குடி துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!
திங்கள் 27, அக்டோபர் 2025 11:47:26 AM (IST)

வாக்காளர் பட்டியலை அனைவரும் மிக மிக கவனத்துடன் சரி பார்க்க வேண்டும்: கனிமொழி எம்.பி.
திங்கள் 27, அக்டோபர் 2025 11:34:07 AM (IST)

கரூர் துயர சம்பவம்: பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து விஜய் ஆறுதல்!
திங்கள் 27, அக்டோபர் 2025 11:24:11 AM (IST)

2026 தேர்தல் திமுகவிற்கு சோதனையாக இருக்கும் : கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ பேச்சு பேச்சு!
திங்கள் 27, அக்டோபர் 2025 10:22:18 AM (IST)

பைசன் படக்குழுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
திங்கள் 27, அக்டோபர் 2025 8:55:18 AM (IST)




