» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரையாண்டுத் தேர்வுகள் டிச.10ம் தேதி தொடக்கம் : கால அட்டவணை வெளியீடு!
புதன் 19, நவம்பர் 2025 5:10:01 PM (IST)
தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வுகள் டிச.10-ம் தேதி தேர்வுகள் தொடங்கி 23-ம் தேதி நிறைவு பெறுகிறது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15-ம்தேதி தொடங்கி 23-ம்தேதி வரையும், பிளஸ்2 மற்றும் 10-ம் வகுப்பிற்கு டிசம்பர் 10-ம்தேதி தேர்வுகள் தொடங்கி 23-ம்தேதி வரையும் நடைபெறுகிறது. 24-ம்தேதி முதல் அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது.
6 முதல் 9ஆம் வகுப்புகள்
டிசம்பர் 15- தமிழ்மொழி தேர்வு
டிசம்பர் 16- ஆங்கிலம்
டிசம்பர் 17- விருப்ப மொழி தேர்வு
டிசம்பர் 18 கணிதம்
டிசம்பர் 19- உடற்கல்வி தேர்வு
டிசம்பர் 22- அறிவியல்
டிசம்பர் 23- சமூக அறிவியல்
10-ஆம் வகுப்பு
டிசம்பர் 10- தமிழ்மொழி
டிசம்பர் 12- ஆங்கிலம்
டிசம்பர் 15- கணிதம்
டிசம்பர் 18- அறிவியல்
டிசம்பர் 22- சமூக அறிவியல்
டிசம்பர் 23 விருப்ப மொழி தேர்வு
11ஆம் வகுப்பு
டிசம்பர் 10- தமிழ்
டிசம்பர் 12 ஆங்கிலம்
டிசம்பர் 15- இயற்பியல், பொருளாதாரம்
டிசம்பர் 17- கணிதம், விலங்கியல், வர்த்தகம்
டிசம்பர் 19- வேதியியல், கணக்கு பதிவியல்
டிசம்பர் 22- கணினி அறிவியல்
டிசம்பர் 23- உயிரியல், வரலாறு, தாவரவியல்
12ஆம் வகுப்பு
டிசம்பர் 10- தமிழ்மொழி தேர்வு
டிசம்பர் 12- ஆங்கிலம்
டிசம்பர் 15- கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், விவசாய அறிவியல்
டிசம்பர் 17- வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
டிசம்பர் 19- இயற்பியல், பொருளாதாரம்
டிசம்பர் 22- உயிரியல், தாவரவியல், வரலாறு
டிசம்பர் 23- கணினி அறிவியல்"
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காங்கிரஸ் கட்சி செய்த துரோகத்தை பராசக்தி படம் காட்டியுள்ளது: அண்ணாமலை பாராட்டு
திங்கள் 12, ஜனவரி 2026 12:41:39 PM (IST)

ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைக்கு திமுக அரசு உடந்தை: அன்புமணி குற்றச்சாட்டு!
திங்கள் 12, ஜனவரி 2026 12:00:07 PM (IST)

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 12, ஜனவரி 2026 11:48:32 AM (IST)

ஒட்டப்பிடாரம் அரசு கல்லூரியில் அமைச்சர் கோவி. செழியன்ஆய்வு
திங்கள் 12, ஜனவரி 2026 11:38:10 AM (IST)

சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்து சேவை: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
திங்கள் 12, ஜனவரி 2026 11:09:23 AM (IST)

லோடு ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் காயம்: சாலையில் சிதறிய வாழைக்காய்கள்..!
திங்கள் 12, ஜனவரி 2026 7:57:56 AM (IST)

