» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
செங்கோட்டையன் பற்றி கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை: எடப்பாடி பழனிசாமி காட்டம்!
வெள்ளி 28, நவம்பர் 2025 11:46:46 AM (IST)

செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் என்பதால் அவரைப் பற்றி கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று விஜய் முன்னிலையில், தவெகவில் இணைந்தார். இந்நிலையில் அதிமுகவில் சமீபத்தில் இணைந்த ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி திருமண விழா மதுரையில் நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி நேற்று மதுரை வந்தார்.
செங்கோட்டையன் தவெகவில் இணைந்தநிலையில் பழனிசாமி மதுரை வந்ததால், அவரை பார்க்க ஏராளமான அதிமுக தொண்டர்கள் திரண்டனர். மதுரை மாவட்ட முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், அமைப்பு செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் கட்சியினர் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.
திருமண விழாவுக்கு வந்த பழனிசாமியிடம் செய்தியாளர்கள், செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "என்னிடம் ஏன் கேட்கிறீர்கள். அதை அவரிடமே கேளுங்கள். அவர் எந்தக் கட்சியில் சேர்ந்தால் எங்களுக்கு என்ன? அவர் அதிமுகவில் இல்லை. அதனால், அதற்கு பதில் சொல்ல அவசியமில்லை” என்று காட்டமாக பதில் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள், ‘நான் என்று ஒருவன் நினைத்தால் ஆண்டவன், தான் என்று தண்டித்து விடுவார், இறைவன் கண்காணித்து கொண்டிருக்கிறார்’ என்று மறைமுகமாக உங்களை செங்கோட்டையன் குற்றம் சொல்லியிருக்கிறாரா?’ என்று கேட்டனர். அதற்கு, அவர், "ஒருவர் கருத்தில் மற்றொருவர் தலையிட முடியாது. மேலும், ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உள்ளது. அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் என்பதால் அவரைப் பற்றி கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை, ” என்று கூறி சென்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டியூட் படத்தில் கருத்த மச்சான் பாடலை நீக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 28, நவம்பர் 2025 12:26:08 PM (IST)

அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும்: முதல்வர் உத்தரவு
வெள்ளி 28, நவம்பர் 2025 11:33:51 AM (IST)

வட தமிழகம் நோக்கி நகரும் டித்வா புயல்: 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!
வெள்ளி 28, நவம்பர் 2025 10:43:53 AM (IST)

குமரி பகவதி அம்மன் கோவில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.1.65 லட்சம் வருவாய்!
வெள்ளி 28, நவம்பர் 2025 10:42:22 AM (IST)

நடுக்கடலில் மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் காயம் - தூத்துக்குடியில் பரபரப்பு
வெள்ளி 28, நவம்பர் 2025 10:31:29 AM (IST)

ஓடும் ரயிலில் ஆசிரியையிடம் 10 பவுன் நகை திருடியவர் கைது!
வெள்ளி 28, நவம்பர் 2025 8:43:34 AM (IST)




