» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: 12 மணி நேரம் நீடித்த பரபரப்பு

வியாழன் 4, டிசம்பர் 2025 10:43:16 AM (IST)



உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டும், திருப்பரங்குன்றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத் தூணில் நேற்று இரவு தீபம் ஏற்​ற போலீசார் அனுமதி மறுத்ததால் பதற்​றம் நில​வியது. இதனால் அதிருப்தி அடைந்த இந்து முன்​னணி, பாஜக​வினர் போலீசாருடன் தள்​ளு​முள்​ளு​வில் ஈடு​பட்​டனர்.

மதுரை திருப்பரங்குன்றம் கோயி​லில் நவ. 25-ம் தேதி கொடியேற்​றத்​துடன் திருக்​கார்த்​திகை தீபத் திரு​விழா தொடங்​கியது. முக்​கிய நிகழ்ச்​சி​யான தீபத் திரு​விழாவையொட்டி நேற்று காலை வைரத் தேரோட்​டம் நடை​பெற்​றது. வழக்​க​மாக உச்​சிப் பிள்​ளை​யார் கோயில் முன் தீபம் ஏற்​றப்​படும். இந்​நிலை​யில், நடப்​பாண்டு மலை உச்​சி​யில் உள்ள தீபத் தூணிலும் கார்த்​திகை தீபம் ஏற்ற வேண்​டும் என்று உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு நேற்று முன்​தினம் உத்​தர​விட்​டது.

இதையடுத்​து, திருப்பரங்குன்றம் முழு​வதும் காவல் ஆணை​யர் லோக​நாதன் தலை​மை​யில் நேற்று போலீசார் குவிக்​கப்பட்​டனர். இந்​நிலை​யில், நீதி​மன்ற உத்​தர​வுப்​படி மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்​று​வதற்​குரிய நெய், காடாத்​துணி போன்​றவற்றை நேற்று பிற்​பகல் கோயில் பணி​யாளர்​கள் கொண்டு சென்​றனர்.

இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்​வரா சுப்​பிரமணி​யம், பாஜக மாநிலப் பொதுச் செய​லா​ளர் ராம.சீனி​வாசன் தலை​மை​யில் ஏராள​மானோர் திரண்​டு, மாலை 5 மணி​யள​வில் 16 கால் மண்​டபம் முன் அமர்ந்து கந்​தசஷ்டி கவசம் பாடினர். இதில் ஆயிரக்​கணக்​கானோர் கலந்து கொண்​டனர்.

இதற்​கிடை​யில், மாலை 6 மணி​யள​வில் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் பால தீபம் ஏற்​றப்​பட்​டது. பின்​னர் உச்​சிப் பிள்​ளை​யார் கோயில் முன்​புள்ள தீபத்​தூணில் மகா தீபம் ஏற்​றப்​பட்​டது. ஆனால், மலை உச்சி தீபத்​தூணில் தீபம் ஏற்ற எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்லை என்ற தகவல் பரவியது.

இதனால் அதிருப்தி அடைந்த இந்து முன்​னணி, பாஜக​வினர் மற்​றும் பக்​தர்​கள் திரண்டு தீபத்​தூணில் தீபம் ஏற்​றக்​கோரி கோஷமிட்​டபடி, போலீசாரின் தடைகளை அப்​புறப்​படுத்தி 16 கால் மண்​டபம் வரை முன்னேறினர்.

அவர்​களைத் தடுக்க முயன்ற போலீசாருக்​கும், இந்து அமைப்​பினருக்​கும் இடையே தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது. இதில் போலீசார் உள்​ளிட்ட சிலர் காய

மடைந்​தனர். பின்​னர் தடைகளை மீறி "வீர​வேல், வெற்​றிவேல், முரு​க​னுக்கு அரோக​ரா” என கோஷம் எழுப்​பிய​வாறு கோயிலை நோக்கி ஏராள​மானோர் சென்​றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்​பட்​டது. இதற்​கிடை​யில், திருப்பரங்குன்றம் பகு​தி​யில் மக்​கள் கூடு​வதை தடுக்க 144 தடை உத்​தரவை ஆட்​சி​யர் பிர​வீன்​கு​மார் பிறப்​பித்​தார்.

இதையடுத்​து, மலை​யேறும் இடத்​தில் தென்​மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா தலை​மை​யில் கூடு​தல் பாது​காப்பு போடப்​பட்​டது. மதுரை​யின் பல்​வேறு பகு​தி​களில் போராட்​டத்​தில் ஈடு​பட்ட இந்து முன்​னணி​யினர் உள்​ளிட்​டோர் கைது செய்​யப்​பட்​டனர்.

நிமிடத்​துக்கு நிமிடம் பரபரப்பு: திருப்​பரங்​குன்​றத்​தில் நேற்று காலை முதலே பரபரப்பு நில​வியது. நீதி​மன்ற உத்​தர​வுப்​படி தீபம் ஏற்​றப்​பட்​டு​விடும் என்று பக்​தர்​கள் மிகுந்த எதிர்​பார்ப்​புடன் இருந்த நிலை​யில், தீபம் ஏற்ற அனு​ம​திக்​கக் கூடாது என்ற நிலைப்​பாட்​டில் அரசுத் தரப்பு மிக உறு​தி​யாக இருந்​தது. இரவு 9 மணிக்​குப் பின்​னரும் தீபம் ஏற்​றபடு​வதற்​கான எந்த அறிகுறி​யும் தென்​பட​வில்லை என்​ப​தால் பக்​தர்​களுக்கு ஏமாற்​றமே மிஞ்​சி​யது.

சிஐஎஸ்​எப் வீரர்​கள்​... நீதி​மன்ற உத்​தர​வுப்​படி நேற்று மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்​றப்​ப​டாத​தால், இது தொடர்​பாக தாக்​கலான அவம​திப்பு வழக்கை விசா​ரித்து நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: நீதி​மன்ற உத்​தரவு மீறப்​பட்​டுள்​ளது. குறை​பாடு​களு​டன் ஒரு மேல்​முறை​யீட்டு மனுவை தாக்​கல் செய்​துள்​ளனர்.

இது நீதி​மன்​றத்​தின் உத்​தரவை மீறு​வதற்​கான தந்​திர​மாகும். கோயில் செயல் அலு​வலர், நீதி​மன்ற உத்​தரவை அமல்​படுத்த மாட்​டோம் என்​பதை தெளிவுபடுத்தி உள்ளார்.நீதி​மன்ற உத்​தரவை மீறும் அதி​காரி​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உச்ச நீதி​மன்​றம் ஏற்​கெனவே உத்​தர​விட்​டுள்​ளது. இந்த விவ​காரத்​தில் மனு​தா​ரரின் அடிப்​படை உரிமை​களும் அடங்​கி​யுள்​ளன. சட்​டத்​தின் ஆட்சி ஆபத்​தில் உள்​ளது. நீதி​மன்​றத்​தின் உத்​தரவை அரசு நிர்​வாகம் கண்டு கொள்​ளாமல் இருக்க முடிவு செய்​துள்​ளது.

யாரை​யும் தூக்​கி​லிட​வோ, கட்​டிடத்தை இடிக்​கவோ உத்​தர​விட​வில்​லை. பாதிக்​கப்​பட்ட தரப்பு என்று கூறக்​கூடிய தர்கா தரப்​பில், நீதி​மன்ற உத்​தர​வுக்கு தடை கோர​வில்​லை. உத்​தர​வுக்கு கீழ்ப்​படிவதை உறுதி செய்​வது நீதி​மன்​றத்​தின் அதி​காரத்​துக்கு உட்​பட்​டது. இந்த வழக்​கில் அத்​தகைய அணுகு​முறையைப் பின்​பற்ற விரும்​பு​கிறேன்.

மனு​தா​ரர் 10 பேருடன் மலைக்​குச் சென்​று, தீபத்​தூணில் தீபம் ஏற்ற அனு​ம​திக்​கிறேன். இதை நிறைவேற்ற மனு​தா​ரருக்​கும், அவருடன் செல்​பவர்​களுக்​கும் பாது​காப்​புக்​காக உயர் நீதி​மன்​றத்​தின் மதுரை அமர்​வில் உள்ள மத்​திய தொழிலக பாது​காப்​புப் படை வீரர்​களை அனுப்​பு​மாறு சிஐஎஸ்​எப் கமாண்​டருக்கு உத்​தர​விடு​கிறேன்.

இந்த உத்​தரவை நிறைவேற்​றி, நாளை (இன்​று) அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். இவ்​வாறு நீதிபதி உத்​தர​வில் கூறியுள்​ளார். இதையடுத்​து, 60-க்​கும் மேற்​பட்ட சிஐஎஸ்​எப் வீரர்​களு​டன் மனு​தா​ரர் மலைமீது ஏற முயன்​றார்.

ஆனால், மதுரை காவல் ஆணை​யர் லோக​நாதன் தலை​மையி​லான போலீசார் அவர்​களை தடுத்து நிறுத்​தி, 144 தடை உத்​தரவு இருப்​ப​தால் கூட்​ட​மாக மலை​யேற அனு​ம​திக்க முடி​யாது. மனு​தா​ரர் வழக்​கறிஞர்​கள் தரப்​பில் "2 பேர் மட்​டும் சென்று தீபம் ஏற்​றுகிறோம்” என்று கூறியதை​யும் போலீசார் ஏற்க மறுத்​து​விட்​டனர்.

இன்று விசா​ரணை: தனி நீதிபதி உத்​தர​வுக்கு எதி​ராக அரசுத் தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள மேல்​முறை​யீட்டு மனு விசா​ரணைக்கு ஏற்​கப்​பட்​டுள்​ளது. இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்​சந்​தி ரன் தலை​மையி​லான அமர்​வில் முதல் வழக்​காக விசா​ரிக்​கப்​படு​கிறது.

அரசு திட்​ட​மிட்டே தடுத்​து​விட்​டது: ராமரவிக்​கு​மார், வழக்​கறிஞர் அருண்​சு​வாமி​நாதன் ஆகியோர் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, "144 தடை உத்​தரவை காட்​டி​யும், மேல் முறை​யீடு செய்​துள்​ள​தாக​வும் கூறி அனு​ம​திக்க மறுக்​கின்​றனர். தமிழக அரசு திட்​ட​மிட்டு இதை செய்​கிறது. நீதி​மன்​றம் மூலம் அனு​மதி பெற்று கண்​டிப்​பாக தீபம் ஏற்​று​வோம்” என்​றனர். இதற்​கிடை​யில், 65 சிஎஸ்​ஐஎப் வீரர்​களும் அங்​கிருந்து திரும்​பிச் சென்​றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory