» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருப்பரங்குன்றத்தில் 144 தடையாணை ரத்து: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எச்சரிக்கை
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:19:36 AM (IST)
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில் மதுரை ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர் மீதான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு தடை கோரிய மனுவை 2 நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் நேற்று மாலை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, கோயில் செயல் அலுவலர், காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆஜராக வேண்டும் எனவும், நேரில் இல்லாவிட்டாலும் காணொலி வாயிலாக உடனடியாக ஆஜராக வேண்டும் எனவும், காவல் ஆணையர் சீருடையில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அரசுத் தரப்பில் "அதிகாரிகள் 5 நிமிடங்களில் ஆஜராக வேண்டும் என்றால் எப்படி?" என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நீதிபதி, "5.30 மணிக்குள் ஆட்சியர், காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர் காணொலி வாயிலாக ஆஜராகாவிட்டால் கடும் உத்தரவு பிறப்பிக்கப்படும்" என்றார். பின்னர் காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் காணொலி வாயிலாக ஆஜரானார்.
அவரிடம் நீதிபதி, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தீர்களா, 144 தடை உத்தரவைப் பிறப்பிக்க ஆட்சியருக்கு எப்போது பரிந்துரைக்கப்பட்டது என்றெல்லாம் கேள்வி எழுப்பினார். அதற்கு காவல் ஆணையர் பதில் அளித்தார்.
பின்னர் நீதிபதி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்காக மனுதாரர், அவரது வழக்கறிஞர்கள் ஆகியோர் சிஐஎஸ்எப் பாதுகாப்புடன் மலைக்குச் செல்ல முயன்றபோது காவல் ஆணையர் தடுத்துள்ளார். 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், மேலே செல்ல அனுமதிக்க இயலாது என்று கூறியுள்ளார்.
அதாவது, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற இயலாது என்று தெரிவித்துளளார். இதனால் தீபம் ஏற்ற இயலவில்லை. காவல் ஆணையர் போதுமான பாதுகாப்பு வழங்கியிருந்தால், பிரச்சினை பெரிதாகியிருக்காது. ஆணையர் நீதிமன்றத்தைவிட, ஆட்சியர் பெரியவர் என்று எண்ணியுள்ளார். ஆட்சியர் பிறப்பித்த உத்தரவால், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த இயலவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த 144 தடை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இன்று (டிச. 4) சர்வாலய தீபத்திருநாள் என்பதால் இன்றும் கார்த்திகை தீபம் ஏற்றலாம். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற காவல் ஆணையர் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். மனுதாரர் தீபத் தூணில் தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக நாளை (இன்று) காலை 10.30 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த உத்தரவை மீறினால் கடும் விளைவுகள் ஏற்படும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்..!!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:55:02 PM (IST)

குமரி சுற்றுலாத்தளத்தில் போலி பார்க்கிங் ரசீது தயாரித்து பணம் வசூல் - 2பேர் கைது!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:25:06 PM (IST)

தவெக - காங்கிரஸ் கூட்டணி? விஜய் உடன் ராகுலின் முக்கிய ஆலோசகர் திடீர் சந்திப்பு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 3:50:57 PM (IST)

தூத்துக்குடியில் ஒரே இரவில் 25 மாடுகள் பறிமுதல் : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!
வெள்ளி 5, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

கானல்நீரானது சார்மினார் ரயில் நீட்டிப்பு திட்டம் : ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுக்குமா?
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:13:07 PM (IST)

தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 10:57:27 AM (IST)


