» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண்குரலில் பேசி வாலிபரிடம் ரூ.17½ லட்சம் மோசடி செய்தவர் கைது!

வெள்ளி 12, டிசம்பர் 2025 3:28:52 PM (IST)

அரியலூர் அருகே திருமண ஆசை காட்டி, இளைஞரிடம் பெண் குரலில் பேசி 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். 

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் தனது மகன் பார்த்திபனுக்கு திருமணம் செய்து வைக்க தனியார் திருமண தகவல் நிலையத்தில் ஆன்லைனில் விவரங்களை பதிவு செய்திருந்தார். இந்த தகவல் அறிந்து whatsapp ஆப் மூலம் பெண் ஒருவர் தொடர்பு கொண்டு பார்த்திபனிடம் பேசியுள்ளார், சகஜமாக பேசி பழகி உள்ளனர்.

மேலும் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி, பார்த்திபனிடமிருந்து ரூ.17.50 லட்சம் முதலீடு செய்ய வைத்து ஏமாற்றியுள்ளார், இது குறித்து காவல் நிலையத்தில் பார்த்திபன் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அது ஒரு ஆண் பெண் குரலில் பேசி ஏமாற்றியது தெரிய வந்தது, அதனை தொடர்ந்து நேற்று அரியலூர் போலீசார் பெண் குரலில் பேசி பார்த்திபனை ஏமாற்றிய கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் அசார் (36) என்பவரை கைது செய்து செல்போன், சிம் பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory