» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரி மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகள்: சிறப்பு கண்காணிப்பு அலுவலர் விஜய் நெக்ரா ஆய்வு

திங்கள் 22, டிசம்பர் 2025 5:27:18 PM (IST)



குமரி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் குறித்து தென் மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் விஜய் நெக்ரா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தினால் தென் மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் விஜய் நெக்ரா, கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில், நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் - கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 15,92,872 வாக்காளர்களில் சிறப்பு தீவிர திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் அடிப்படையில் 14,39,499 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளார்கள். மீதமுள்ள 1,53,373 வாக்காளர்களில் இறந்த வாக்காளர்கள், கண்டறிய இயலாத / குடியிருப்பு பகுதியில் வசிக்காத வாக்காளர்கள், நிரந்தரமாக குடிபெயர்ந்த வாக்காளர்கள், இரட்டை பதிவு கொண்ட வாக்காளர்கள், இதர இனங்களில் இடம் பெற்றுள்ளார்கள்.

அதனடிப்படையில் இன்று குளச்சல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வட்டக்கரை பகுதிக்கு இடம்பெயர்ந்து வசித்து வரும் வாக்காளரின் விபரங்கள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாகத்திலிருந்து இடம் மாறி தற்போது வடக்கு கோணம் பகுதிக்கு இடம்பெயர்ந்து வசித்து வரும் வாக்காளரை நேரில் சந்தித்து விபரங்கள் கேட்டறியப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆஸ்ராமம் பகுதியிலிருந்து பாகம் மாறி தற்போது சுசீந்திரம் பகுதிக்கு இடம்பெயர்ந்து புதிய வாக்காளர் படிவம் பூர்த்தி செய்து வழங்கிய வாக்காளரின் விபரங்களை நேரில் ஆய்வு மேற்கொண்டு விபரங்கள் கேட்டறியப்பட்டது. மேலும் திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுசீந்திரம் பகுதிக்கு இடம்பெயர்ந்து கடந்த 6 வருடங்களாக வசித்து வந்த வாக்காளர் திருவனந்தப்புரத்திலுள்ள வாக்காளர் பட்டியலிலிருந்து தனது பெயரினை நீக்கி இங்கு புதிய வாக்காளர் படிவம் பூர்த்தி செய்து வழங்கிய வாக்காளரின் விபரங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றார். 

முன்னதாக அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டு அவர்களின் கருத்துக்களை கேட்டறியப்பட்டது. தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும்சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணிகள் குறித்து உதவி தேர்தல் அலுவலர், கூடுதல் உதவி தேர்தல் அலுவலர்கள், சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்கள்.

ஆய்வுகளில் மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங்கோதை, மாவட்ட கூடுதல் உதவி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் ஆன்றணி பெர்னாண்டோ, நாகர்கோவில் மாநாகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கு.சுகிதா, பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சு.காளீஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory