» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சபரிமலைக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது வேன் மோதி விபத்து: 2பேர் உயிரிழப்பு
வெள்ளி 2, ஜனவரி 2026 12:49:28 PM (IST)
சின்னமனூர் அருகே சபரிமலைக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது வேன் மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேலத்தெருவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வருடம் தோறும் அதே பகுதியை சேர்ந்த மாரிச்சாமி என்ற குருசாமி தலைமையில் சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். அதன்படி மாரிச்சாமி (55) தலைமையில் ராம்கி (35) மற்றும் 7 பேருடன் ஆண்டிபட்டியில் இருந்து நேற்று இரவு பாதயாத்திரையாக சபரிமலைக்கு புறப்பட்டனர்.
இன்று அதிகாலை அவர்கள் சின்னமனூர் அருகில் உள்ள கோட்டூர்-சீலையம்பட்டி சத்தியா கார்டன் பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா மேலப்பாடியூரை சேர்ந்த சிவக்குமார் (34) என்பவர் வேனில் ஐயப்ப பக்தர்களுடன் சபரிமலைக்கு சென்று கொண்டிருந்தார்.
அதிகாலை 4.30 மணி அளவில் மற்றவர்கள் முன்னே சென்று விட மாரிச்சாமி, ராம்கி மட்டும் பின்னால் வந்துகொண்டிருந்தனர். இவர்கள் மீது வேன் மோதியது. இதில் மாரிச்சாமி மற்றும் ராம்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதை பார்த்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சின்னமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வைகோவின் நடைபயணத்தை காங்கிரஸ் தலைவர்கள் புறக்கணிப்பு!
வெள்ளி 2, ஜனவரி 2026 12:13:34 PM (IST)

மின்சாரம் பாய்ச்சி பெண் கொடூர கொலை: நடத்தை சந்தேகத்தில் கணவன் வெறிச்செயல்!
வெள்ளி 2, ஜனவரி 2026 12:07:20 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் சிலம்பம் பயிற்சியாளர் கைது!
வெள்ளி 2, ஜனவரி 2026 10:26:26 AM (IST)

முத்தாலங்குறிச்சி காமராசுவின் நெல்லை சீமையில் கிறித்தவம் நூல்: கவிஞர் வைரமுத்து வெளியிட்டார்!
வெள்ளி 2, ஜனவரி 2026 10:20:44 AM (IST)

ஆங்கில புத்தாண்டு: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 545 குழந்தைகள் பிறந்தன!
வெள்ளி 2, ஜனவரி 2026 8:37:48 AM (IST)

தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் வேகம் இன்று முதல் அதிகரிப்பு!
வியாழன் 1, ஜனவரி 2026 12:47:20 PM (IST)


