» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நூறு ஆண்டுகள் பழமையான கோவில் இடிப்பு: இந்து முன்னணி குற்றச்சாட்டு!
வியாழன் 8, ஜனவரி 2026 12:14:32 PM (IST)
நூறு ஆண்டுகள் பழமையான வழிபாட்டுத் தலத்தை இடிக்கக் கூடாது என்ற சட்டத்தை திமுக அரசு மீறியுள்ளதாக இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ச.ராஜேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள பெருமாநல்லூர் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராக்கியாபட்டி அறிவொளி நகர் பகுதியில் குமரன்குன்று என்ற பெயரில் முருகன், விநாயகர், சிவலிங்கம், நந்தி உள்ளிட்ட சந்நிதிகள் கொண்ட செல்வ முத்துக்குமார சுவாமி கோயில் 2 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.
அரசுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று வருவாய்த் துறையில் கோயிலை இடித்து அகற்றினர். இதையறிந்த இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பொதுச் செயலாளர் கிஷோர்குமார் உள்ளிட்டோர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீஸாருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் காடேஸ்வரா சுப்பிரமணியத்துக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, அனைவரையும் சமாதானப்படுத்தினர்.
இதையடுத்து, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காடேஸ்வரா சுப்பிரமணியம் சேர்க்கப்பட்டார். அங்கு இந்து முன்னணியினர் மற்றும் பாஜகவினர் திரண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.இதற்கிடையில், இந்த சம்பவத்தைக் கண்டித்து தாராபுரம் சாலை, அவிநாசி சாலை, காந்தி நகர், புஷ்பா திரையரங்கு சந்திப்பு, புதிய பேருந்து நிலையம் என 5 இடங்களில் மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 120 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ச.ராஜேஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, "திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினரின் தூண்டுதலால், அதிகாரிகள் கோயிலை இடித்துள்ளனர். அங்கு சென்ற இந்து முன்னணி மாநிலத் தலைவர் மீது தாக்குதல் நடத்தியதில், அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 100 ஆண்டுகள் பழமையான வழிபாட்டுத் தலத்தை இடிக்கக் கூடாது என்ற சட்டத்தை மீறி, கோயிலை இடிக்க உத்தரவிடுவதே தண்டனைக்குரிய குற்றமாகும். அத்துமீறிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜனநாயகன் பேனா் விழுந்து அரசு ஊழியா் படுகாயம்: தவெக நிா்வாகிகள் 3போ் கைது!
வெள்ளி 9, ஜனவரி 2026 11:30:37 AM (IST)

ஜன நாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 9, ஜனவரி 2026 10:55:38 AM (IST)

தூத்துக்குடி-மைசூர் இடையே பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
வியாழன் 8, ஜனவரி 2026 8:38:08 PM (IST)

ஜன நாயகன் விவகாரத்தில் பாஜக நெருக்கடி கொடுத்ததா? எச். ராஜா மறுப்பு
வியாழன் 8, ஜனவரி 2026 8:30:29 PM (IST)

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவு முன்னாள் எம்எல்ஏக்கள் திமுகவில் ஐக்கியம்!
வியாழன் 8, ஜனவரி 2026 5:54:09 PM (IST)

தூத்துக்குடியில் போலி ஐபோன் உதிரிபாகங்கள் விற்பனை : போலீசார் அதிரடி சோதனை!
வியாழன் 8, ஜனவரி 2026 3:43:14 PM (IST)

