» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உங்க கனவ சொல்லுங்க திட்டத்தில்1057 தன்னார்வலர்கள் தேர்வு: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 9, ஜனவரி 2026 4:52:17 PM (IST)

குமரி மாவட்டத்தில், உங்க கனவ சொல்லுங்க திட்டத்தில் கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள 1057தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர் என்று ஆட்சியர் ஆர்.அழகுமீனாதெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், இன்று திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரி வட்டம் பாடியநல்லூரிலிருந்து காணொலி காட்சி வாயிலாக உங்கள் கனவ சொல்லுங்கள் என்ற புதிய திட்டத்தினை துவக்கி வைத்ததைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்காவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தன்னார்வலர்களுக்கு தொப்பி, அடையாள அட்டை, கையேடு, படிவம் உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களின் மீது அக்கறை கொண்டு மக்களைத்தேடி மருத்துவம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகைதிட்டம், மகளிர் விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், அன்புச் சோலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போதுதமிழ்நாடு முதலமைச்சர்உங்கள் கனவ சொல்லுங்கள் என்ற புதிய திட்டத்தினை இன்று திருவள்ளுவர்மாவட்டத்தில் துவக்கி வைத்தார்கள்.
அந்த வகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும். அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் "உங்க கனவ சொல்லுங்க" என்ற திட்டம் செயல்படுத்தபடவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்குட்பட்ட 1.91 கோடி குடும்பங்களை நேரடியாக சந்தித்து, அதாவது உங்கள் கனவ சொல்லுங்கள் திட்டத்தின் வாயிலாகமாநில மக்களின் தனிப்பட்ட கனவுகள், தேவைகள் உள்ளிட்டவைகள் கேட்டறிந்து அரசின் கொள்கைகளாக மாற்றுதற்கான முயற்சியாகும்.ஒரு குடும்பத்தின் கனவு என்ன என்பதை தெரிந்துகொள்ள, பயிற்சி பெற்ற 50,000 தன்னார்வலர்கள், வீடு வீடாகச் சென்று, 10 வகையான திட்டங்கள் அடங்கிய படிவத்தை கொடுத்து, எந்தெந்த திட்டங்களில் பயன் பெற்றீர்கள் என கேட்பர். அது மட்டுமல்லாது, அவர்களின் மூன்று கனவுகள் என்ன எனவும் கேட்பர். இரண்டு நாட்களுக்கு பின், அவர்களின் வீட்டுக்கு மீண்டும் சென்று, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெற்று, அந்த விபரங்களை மொபைல்போன் செயலியில் பதிவு செய்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு எண்ணுடன் கனவு அட்டை வழங்கப்படும்.
இதில் ஆதார் எண் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் பெறப்படும். 30 நாட்களில் வீடு வீடாகச் சென்று தன்னார்வலர்கள் தகவலைப் பெறுவர். தன்னார்வலர்கள், இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை சரிபார்த்து கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்வர். கைபேசி செயலியில் பதிவேற்றியப் பின்னர் அக்குடும்பத்திற்கு தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டையினை வழங்குவர். இந்த அட்டை மூலம் www.uks.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கனவு / கோரிக்கையின் நிலை குறித்து தெரிந்துக் கொள்ளலாம். வரும் 11.01.2026 ம் தேதி, இணையதளம் பயன்பாட்டுக்கு வந்துவிடும். வெளிநாடுவாழ் தமிழர்கள் இணையதளத்தில் அவர்களின் கனவை தெரிவிக்கலாம்.
இத்திட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் உள்ள மொத்தம்ஊரக பகுதிகளில் - 205262 குடும்பங்களையும், நகர்புறங்களில் 292522 என மொத்தம் 497784 குடும்பங்களையும் இத்திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள ஊரகப்பகுதிகளுக்கு 470 தன்னார்வலர்களும், நகர்ப்புறங்களுக்கு 587 தன்னார்வலர்களும் என மொத்தம் 1057தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
ஒவ்வொரு தன்னார்வலர்களும் ஒரு நாளைக்கு 30 குடும்பங்களை கணக்கெடுப்பு மேற்கொள்ளவும், 15 முதல் 21 நாட்களுக்குள் கணக்கெடுப்பு பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு படிவத்தில் பூர்த்தி செய்யும் விவரங்களை கைப்பேசி செயலி மூலம் தரவுகள் சேகரிக்கப்பட உள்ளது.கணக்கெடுப்பு மேற்கொள்ளும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் கனவு அட்டை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு தர பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு உணவு ஆணையத்தலைவர் என்.சுரேஷ் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், மகளிர் திட்ட திட்ட இயக்குநர் பத்ஹூ முகம்மது நசீர், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் செல்வகுமார், மகளிர் திட்ட உதவி திட்ட இயக்குநர்கள்கலைசெல்வி, வளர்மதி, பாலமுருகன், பாலசுந்தரம், தங்கராஜ், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

200+ தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!
சனி 10, ஜனவரி 2026 12:31:12 PM (IST)

நம்ம அரசு புதிய வாட்ஸ்அப் சேவை தொடக்கம் : 50-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் பெறும் வசதி!!
சனி 10, ஜனவரி 2026 12:11:42 PM (IST)

சிவகளையில் ரூ.25 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி: கனிமொழி எம்பி திறந்து வைத்தார்
சனி 10, ஜனவரி 2026 11:54:54 AM (IST)

தூத்துக்குடியில் 1.5 கோடி கஞ்சா ஆயில் பறிமுதல்: 3 நாட்களில் 4பேர் கைது!
வெள்ளி 9, ஜனவரி 2026 8:09:55 PM (IST)

ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ்: வழக்கு விசாரணை ஜன.21க்கு தள்ளி வைப்பு
வெள்ளி 9, ஜனவரி 2026 5:21:19 PM (IST)

ஆதார்,ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து தேர்தலை புறக்கணிக்க முடிவு: விவசாயிகள் அறிவிப்பு!
வெள்ளி 9, ஜனவரி 2026 5:08:32 PM (IST)