» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுகவில் இணையவில்லை, அரசியலில் இருந்தே விலகுகிறேன்: குன்னம் ராமச்சந்திரன் திடீர் முடிவு.!

வியாழன் 22, ஜனவரி 2026 11:38:58 AM (IST)

திமுகவில் இணையப்போவதாக கூறியிருந்த குன்னம் ராமச்சந்திரன், அரசியல் பொதுவாழ்வில் இருந்து விலக முடிவு எடுத்திருப்பதாக திடீரென அறிவித்துள்ளார்.

https://www.tutyonline.net/npic_b/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/npb/kunnamramach_1769062181.jpgஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான வைத்திலிங்கம் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க.வில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து குன்னம் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான ராமச்சந்திரனும் தி.மு.க.வில் இணையப்போவதாக கூறப்பட்டது. அவரும் அதை உறுதி செய்தார்.

இந்த நிலையில், அரசியலில் பொதுவாழ்வில் இருந்து விலகுவதாக குன்னம் ராமச்சந்திரன் இன்று திடீரென அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று காலை வீடியோ பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-நேற்றைய தினம் திமுகவில் இணையப்போவதாக கூறினேன். அதற்கு ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். என்னை பெற்றெடுத்த தாய், வீட்டில் உள்ள ஜெயலலிதா படத்தை என்ன செய்வாய்? என்று கேட்டார். என்னுடைய மகளோ, இது அசிங்கமாக இல்லையாப்பா என்று கேட்டாள். இரவு முழுவதும் எனக்கு தூக்கம் வரவில்லை.

அதனால், பொதுவாழ்வில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன். உடல்நிலையை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுக்கிறேன். நான் எந்த அரசியல் கட்சியிலும் இனி பயணிக்கப் போவதில்லை. அண்ணன் வைத்திலிங்கம், தொண்டர்கள் என்னை மன்னிக்கவும். தொண்டர்கள் அனைவரும் அவர்கள் விரும்பிய இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory