» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னையில் குடியரசு தின விழா கோலாகலம்: ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றினார்

திங்கள் 26, ஜனவரி 2026 11:24:23 AM (IST)


சென்னை மெரினாவில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை காமாஜர் சாலையில் உழைப்பாளர் சிலை எதிரே காலை 8 மணி அளவில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்தார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது. தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

பின்னர் ராணுவ படைப் பிரிவு, கடற்படை பிரிவு, ராணுவ கூட்டுக் குழல் முரசு இசைப் பிரிவு, வான்படை பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். இதன்பிறகு, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

அதன் பின்னர், வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதில் துணை உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.  முன்னதாக 77வது குடியரசு தினத்தையொட்டி, சென்னையில் உள்ள போர் நினைவுச்சின்னத்தில் தேசத்தின் மாவீரர்கள் மற்றும் தியாகிகளுக்கு ஆளுநர் ரவி அஞ்சலி செலுத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory