» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விஜயின் பேன்ட் நிறத்தையும் முதல்வர் ஸ்டாலின் திருடுகிறார் : நாஞ்சில் சம்பத் பேச்சு!
வியாழன் 12, பிப்ரவரி 2026 11:15:48 AM (IST)
தவெக தலைவர் விஜய்யை முதலமைச்சர் நகலெடுக்கிறார். எங்கள் தளபதி போடும் அதே நிற பேண்ட்-ஐ அவரும் போடுகிறார். தளபதிக்கு இருக்கும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா?" என்று நாஞ்சில் சம்பத் பேசினார்.
திருச்செந்தூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரேம் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தெற்கு மாவட்ட செயலாளர் பிரைட்டர் முன்னிலை வகித்தார். இதில் அக்கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசுகையில்,"சூரனை முருகன் சம்ஹாரம் செய்தது போல, ஆட்டம் போடுபவர்களைத் தலைவர் விஜய்யின் தம்பிகள் வீழ்த்துவார்கள். இனி வரும் காலம் நமது காலம்; அடுத்த முதல்வர் விஜய்தான். இரண்டு பெரும் பகைகளை எதிர்த்துத் தலைவர் களத்தில் நிற்கிறார். இந்தியத் துணைக்கண்டத்திலேயே ஒரு கோடி இளைஞர்களைத் தொண்டர்களாகக் கொண்ட தலைவனை அரசியல் களம் இப்போதுதான் பார்க்கிறது."
"மக்களுக்காகத் தொடங்கப்பட்ட தே.மு.தி.க இன்று கரைந்து கொண்டிருக்கிறது. விருப்ப மனு வாங்கக்கூட ஆள் இல்லாத நிலையில் அக்கட்சி உள்ளது. ஆட்சி மாற்றத்திற்காக வந்த உலகநாயகன் கமல்ஹாசன், இன்று அறிவாலயத்தின் தாழ்வாரத்தில் தஞ்சமடைந்துள்ளார். சீமானின் கட்சியை இந்தத் தேர்தலோடு மக்கள் வழியனுப்பி வைக்க வேண்டும்."
தி.மு.க-விற்காக உழைத்தது, கண்ணீர் மற்றும் செந்நீர் சிந்தியது ஒரு குடும்பம் மட்டும்தானா? உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு திருக்குறளைச் சரியாகச் சொல்லத் தெரியுமா? மாநில சுயாட்சி பற்றி அவர் ஒரு மணி நேரம் பேசினால் நான் அரசியலை விட்டு விலகத் தயார். ஜனநாயகன் (விஜய்) வரும்போது நீங்கள் நாற்காலியை விட்டு நகர வேண்டியிருக்கும்."
முதலமைச்சர் எப்போது வெள்ளி நாற்காலியில் அமர்ந்தாரோ, அப்போதே அவரது பதவி நகரத் தொடங்கிவிட்டது. விக்ரவாண்டியில் எங்கள் தளபதி 'ரேம் வாக்' சென்றார்; அதை அப்படியே முதலமைச்சர் நகலெடுக்கிறார். எங்கள் தளபதி போடும் அதே நிற பேண்ட்-ஐ அவரும் போடுகிறார். நிறத்தைக் கூடவா திருட வேண்டும்? தளபதிக்கு இருக்கும் தகுதி உங்களுக்கு இருக்கிறதா?"
சேப்பாக்கம் மைதானத்தில் விசில் ஊதக் கூடாது எனத் தடை விதித்துள்ளனர். தி.மு.க-வினரைப் பார்க்கும் இடமெல்லாம் காது கிழியும் அளவிற்கு விசிலை எடுத்து ஊதுங்கள். யானையின் பிளிறலை விட விசிலின் ஓசை வலிமையானது. இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் சுபத்ரா முருகன், ஒன்றிய செயலாளர்கள் ராஜ்குமார், விஜயராஜ் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேரளாவில் முழு அடைப்பு: தமிழகப் பேருந்துகள் எல்லையில் நிறுத்தம் - பொதுமக்கள் அவதி!
வியாழன் 12, பிப்ரவரி 2026 3:12:37 PM (IST)

என்எல்சி நிறுவனத்தில் ₹442 கோடி முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 12, பிப்ரவரி 2026 12:43:05 PM (IST)

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய் இணைய வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன் அழைப்பு
வியாழன் 12, பிப்ரவரி 2026 12:25:19 PM (IST)

அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்ற வேண்டும் : பயணிகள் சங்கம் கோரிக்கை!
வியாழன் 12, பிப்ரவரி 2026 12:14:10 PM (IST)

தமிழ்நாட்டு மக்களை திமுக முட்டாள்களாக்க முயற்சி : அன்புமணி குற்றச்சாட்டு
வியாழன் 12, பிப்ரவரி 2026 11:04:59 AM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியர் மர்ம மரணம்: போலீசார் விசாரணை!
வியாழன் 12, பிப்ரவரி 2026 8:12:45 AM (IST)


என்னதுFeb 12, 2026 - 11:22:04 AM | Posted IP 162.1*****