» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதல்வர் ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு: திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக!
வியாழன் 19, பிப்ரவரி 2026 10:57:51 AM (IST)

அண்ணா அறிவாலாயத்தில் முதல்வர் ஸ்டாலினை தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா, சந்தித்து திமுக கூட்டணியில் இணைந்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு மற்றும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேமுதிக நிர்வாகிகள் திமுக, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். நீண்ட இழுபறிக்குப் பிறகு, இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து திமுகவுடன் கூட்டணி அமைப்பதாக உறுதி செய்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதன் மூலம் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெறுகிறது. தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் மற்றும் ராஜ்யசபா சீட் வழங்கப்படுமா என்பது குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமிர்த் பாரத் கால அட்டவணையை மாற்றக் கோரிக்கை: நள்ளிரவில் சேருவதால் ரயில் பயணிகள் அவதி
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:02:34 PM (IST)

சீசன் காலத்தில் ஏமாற்றிய கேரை மீன்கள்: சூறைக் காற்றால் பாதியிலேயே கரை திரும்பிய மீனவர்கள்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 5:10:51 PM (IST)

திமுக - தேமுதிக கூட்டணியை விஜயகாந்தின் ஆன்மா மன்னிக்காது: தமிழக பாஜக கடும் விமர்சனம்
வியாழன் 19, பிப்ரவரி 2026 3:53:00 PM (IST)

மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை : ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 3:18:36 PM (IST)

தமிழகத்திற்கு மார்ச் மாதம் 3 முறை பிரதமர் மோடி வருகை: மதுரை, வேலூர், திருச்சியில் பிரசாரம்
வியாழன் 19, பிப்ரவரி 2026 12:38:40 PM (IST)

தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேற இணைந்து பயணிப்போம்: மு.க.ஸ்டாலின் வரவேற்பு
வியாழன் 19, பிப்ரவரி 2026 12:00:03 PM (IST)

