» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நடிகையுடன் தொடர்பு: விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு!
வெள்ளி 27, பிப்ரவரி 2026 4:57:45 PM (IST)
நடிகரும், தவெக தலைவருமான விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்திருக்கிறார். செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு சங்கீதா மனு தாக்கல் செய்திருக்கிறார்.
நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இருவருக்கும் 1999ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதன்பின் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்த நிலையில் திருமணம் முடிந்து 27 ஆண்டுகளுக்கு பின் சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சங்கீதா முன் வைத்திருக்கிறார்.
அதன்படி, நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பது ஏப்ரல் 2021ம் ஆண்டு எனக்கு தெரியவந்தது. இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம். நான் இந்த விஷயத்தை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இதன்படி மார்ச் 20ஆம் தேதி விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றத்தில் தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. விஜய் நேரில் ஆஜராகவில்லை என்றாலும், அவர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்யிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் சங்கீதா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக விஜய் மற்றும் சங்கீதா தம்பதியினர் மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்றனர். அதன்பின் விஜய்யின் எந்தப் படத்தின் விழாவிலும் சங்கீதா பங்கேற்கவில்லை. விஜய் கட்சி தொடங்கிய போதும் கூட அவரது பெற்றோர் பங்கேற்றனர். ஆனால் மனைவி சங்கீதா, மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா என்று யாரும் பங்கேற்கவில்லை. விஜய்யின் மகன் சஞ்சய் தற்போது சிக்மா என்ற படத்தை சந்தீப் கிஷனை வைத்து இயக்கி வருகிறார். இதனை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இருவருக்கும் 1999ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதன்பின் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்த நிலையில் திருமணம் முடிந்து 27 ஆண்டுகளுக்கு பின் சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சங்கீதா முன் வைத்திருக்கிறார்.அதன்படி, நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பது ஏப்ரல் 2021ம் ஆண்டு எனக்கு தெரியவந்தது. இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம். நான் இந்த விஷயத்தை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இதன்படி மார்ச் 20ஆம் தேதி விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றத்தில் தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. விஜய் நேரில் ஆஜராகவில்லை என்றாலும், அவர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே விஜய்யிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் சங்கீதா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக விஜய் மற்றும் சங்கீதா தம்பதியினர் மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்றனர். அதன்பின் விஜய்யின் எந்தப் படத்தின் விழாவிலும் சங்கீதா பங்கேற்கவில்லை. விஜய் கட்சி தொடங்கிய போதும் கூட அவரது பெற்றோர் பங்கேற்றனர். ஆனால் மனைவி சங்கீதா, மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா என்று யாரும் பங்கேற்கவில்லை. விஜய்யின் மகன் சஞ்சய் தற்போது சிக்மா என்ற படத்தை சந்தீப் கிஷனை வைத்து இயக்கி வருகிறார். இதனை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யுத்த வெறி பிடித்த அமெரிக்கா, இஸ்ரேலைக் கண்டித்து தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
வியாழன் 5, மார்ச் 2026 8:15:26 PM (IST)

விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:26:55 PM (IST)

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:30:14 PM (IST)

தமிழகத்தின் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் யார் யார்? முழு விவரம்!
வியாழன் 5, மார்ச் 2026 3:23:08 PM (IST)

ஒட்டுமொத்த தமிழக மக்களின் நிம்மதியே முடிந்து விட்டது: இ.பி.எஸ் கடும் தாக்கு!
வியாழன் 5, மார்ச் 2026 3:14:09 PM (IST)

திமுக - காங்கிரஸ் கூட்டணி புதிய வரலாறு : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
வியாழன் 5, மார்ச் 2026 11:23:06 AM (IST)