» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்: பிரதமர், ஆளுநர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து!
ஞாயிறு 1, மார்ச் 2026 11:49:14 AM (IST)

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநர் ஆர்.என். ரவியின் வாழ்த்துச் செய்தியில், ”முதல்வர் ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியான நீண்ட ஆயுளுடனும் வாழ பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ”தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மக்களுக்கு சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அருள் புரியட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தன்னுடைய வாழ்த்துச் செய்தியில், ”முதல்வர் ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சமூகநீதி, சமத்துவம், வளர்ச்சி ஆகிய இலக்குகளை முன்னிறுத்தி தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தி வரும் உங்கள் தலைமையே இன்னும் பல சாதனைகளை உருவாக்கட்டும். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!” என்று பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யுத்த வெறி பிடித்த அமெரிக்கா, இஸ்ரேலைக் கண்டித்து தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
வியாழன் 5, மார்ச் 2026 8:15:26 PM (IST)

விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:26:55 PM (IST)

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:30:14 PM (IST)

தமிழகத்தின் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் யார் யார்? முழு விவரம்!
வியாழன் 5, மார்ச் 2026 3:23:08 PM (IST)

ஒட்டுமொத்த தமிழக மக்களின் நிம்மதியே முடிந்து விட்டது: இ.பி.எஸ் கடும் தாக்கு!
வியாழன் 5, மார்ச் 2026 3:14:09 PM (IST)

திமுக - காங்கிரஸ் கூட்டணி புதிய வரலாறு : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
வியாழன் 5, மார்ச் 2026 11:23:06 AM (IST)

