» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை - நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 5, மார்ச் 2026 8:27:59 AM (IST)
சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர், புதுவீட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் ரதீசன் என்ற ஸ்டாலின் (36). ஆய்வகத் தொழில்நுட்பவியலாளராக (Lab Technician) பணியாற்றி வந்த இவர், கடந்த 2018-ஆம் ஆண்டு 17 வயது சிறுமி ஒருவரை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்துச் சிறுமியின் உறவினர்கள் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ரதீசன் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். பின்னர் அவர் நாகர்கோவிலில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு நீதிபதி சுந்தரய்யா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் முத்துக்குமாரி ஆஜராகி வாதிட்டார்.
வழக்கின் அனைத்துத் தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அதில்: குற்றம் சாட்டப்பட்ட ரதீசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனையுடன் ரூ. 5,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி இசைத் விழா: 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!
திங்கள் 9, மார்ச் 2026 9:37:29 PM (IST)

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை: சிறந்த நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஊக்கப்பரிசு
திங்கள் 9, மார்ச் 2026 8:43:18 PM (IST)

தமிழக அரசு அச்சுத்துறையில் வேலை: 10-ம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
திங்கள் 9, மார்ச் 2026 5:49:45 PM (IST)

அம்ரித் பாரத் ரயில்: கன்னியாகுமரி மாவட்டம் புறக்கணிப்பு? பயணிகள் அதிருப்தி!
திங்கள் 9, மார்ச் 2026 5:44:32 PM (IST)

மாநிலங்களவைத் தேர்தல்: தம்பிதுரை, திருச்சி சிவா உள்ளிட்ட 6 பேர் போட்டியின்றித் தேர்வு!
திங்கள் 9, மார்ச் 2026 4:56:43 PM (IST)

தமிழக அரசைக் கண்டித்து மார்ச் 12-ல் ஆர்ப்பாட்டம் : தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு!
திங்கள் 9, மார்ச் 2026 4:51:47 PM (IST)

