» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயில் பறிமுதல்: 3 பேர் கைது!
சனி 7, மார்ச் 2026 8:42:28 AM (IST)
தூத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரைப் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயிலைப் பதுக்கி வைத்திருந்த 3 பேரை மத்திய போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரைப் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையாக, மத்திய போதைப்பொருள் புலனாய்வுப் பிரிவு சார்பு ஆய்வாளர் அருண்குமார் தலைமையிலான அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த மூன்று நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலைச் சேர்ந்த ரமேஷ்நாதன் (39), தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த சசிகுமார் (37), காயல்பட்டினம் சிங்கித்துறையைச் சேர்ந்த சிலுவை பிரின்ஸ் (20) என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய சோதனையில், சர்வதேசச் சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 76 கிலோ கஞ்சா ஆயில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்த போதைப்பொருள் எண்ணெயைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இம்மூன்று பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் எண்: 3-இல் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் ரூ.91.20 கோடி நலத்திட்ட உதவிகள்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சனி 7, மார்ச் 2026 11:10:09 AM (IST)

ரயில் இன்ஜினை சிறைபிடித்து இளைஞர் காங்கிரசார் போராட்டம்: இரணியலில் பரபரப்பு!
வெள்ளி 6, மார்ச் 2026 4:49:05 PM (IST)

தூத்துக்குடியில் அங்கன்வாடி கட்டிடம் இடிந்து விபத்து; அதிகாரிகளின் அலட்சியம்: பாஜக கண்டனம்
வெள்ளி 6, மார்ச் 2026 4:30:10 PM (IST)

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது : தூத்துக்குடியில் செல்வப்பெருந்தகை பேட்டி
வெள்ளி 6, மார்ச் 2026 4:12:44 PM (IST)

ஆல் பினிஷ்: சட்டம்- ஒழுங்கு கைமீறி போய் விட்டதா? முதல்வருக்கு ராமதாஸ் கேள்வி!
வெள்ளி 6, மார்ச் 2026 3:49:03 PM (IST)

மாநிலங்களவை தேர்தல்: தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் 6 பேரின் மனுக்கள் ஏற்பு
வெள்ளி 6, மார்ச் 2026 12:48:47 PM (IST)

