» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருட வந்த இடத்தில் குறட்டை விட்ட திருடன்: கன்னியாகுமரியில் விசித்திர சம்பவம்!
சனி 7, மார்ச் 2026 4:30:54 PM (IST)
குளச்சல் அருகே, ஆளில்லாத வீட்டில் திருடப் புகுந்து, அங்கேயே அசந்து தூங்கிய திருடன், ஒரு சிறிய தவறுதலால் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கோடிமுனை மீனவ கிராமத்தைச் சேர்ந்த பிராங்க்ளின் என்பவர் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மகளின் ஊரான மணவாளக்குறிச்சிக்குச் சென்றிருந்ததால், வீடு பூட்டப்பட்டிருந்தது. இதை நோட்டமிட்ட குளச்சல் துறைமுகத் தெருவைச் சேர்ந்த ஆரோக்கிய பிரவின் (38) என்பவர், அதிகாலையில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளார்.
வீட்டிற்குள் சென்ற ஆரோக்கிய பிரவின், அங்குள்ள மெத்தையைப் பார்த்ததும் திருடும் எண்ணத்தை மறந்து, மின்விசிறியைப் போட்டுவிட்டு அங்கேயே அசந்து தூங்கியுள்ளார். அவர் மின்விசிறி சுவிட்சைப் போடும்போது, தவறுதலாக குடிநீர் மோட்டார் சுவிட்சையும் சேர்த்துப் போட்டுவிட்டார்.
நீண்ட நேரம் மோட்டார் ஓடியதால் தண்ணீர் தொட்டி நிரம்பி, பக்கத்து வீட்டு வளாகத்தில் நீர் வழிந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், பிராங்க்ளினின் மகள் ஸ்டெபி கிராப்புக்குத் தகவல் கொடுத்தனர். அவர் விரைந்து வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 2 பட்டுப் புடவைகள் மற்றும் ரூ.1,000 திருடு போயிருப்பது தெரியவந்தது.
திடுக்கிட்டு எழுந்த திருடன், தான் மாட்டிக்கொள்வோம் என அஞ்சி அவசர அவசரமாகத் தப்ப முயன்றுள்ளார். அப்போது ஒரு விசித்திரமான செயலாக, தான் அணிந்து வந்த பேண்டைக் கழற்றிப் போட்டுவிட்டு, அந்த வீட்டில் இருந்த ஒரு பெண்ணின் ஜீன்ஸ் பேண்டை எடுத்து அணிந்துகொண்டு தப்பியோடியுள்ளார். புகாரின் பேரில் குளச்சல் போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் ஒரு நபர் கையில் பையுடன், விசித்திரமான ஆடையுடன் தப்பிச் செல்வது பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் ஆரோக்கிய பிரவினை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து பட்டுப் புடவைகளைப் பறிமுதல் செய்தனர். திருடச் சென்ற இடத்தில் திருடன் குறட்டை விட்டுத் தூங்கியதும், பின்னர் ஆடையை மாற்றித் தப்பியதும் அப்பகுதி மக்களிடையே நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல்: சௌமியா அன்புமணி குற்றச்சாட்டு
ஞாயிறு 8, மார்ச் 2026 10:32:26 AM (IST)

தமிழகத்தில் இருந்து விடைபெறும் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
சனி 7, மார்ச் 2026 5:37:23 PM (IST)

வீடுபுகுந்து காவலரே பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் : டிடிவி தினகரன் கண்டனம்!
சனி 7, மார்ச் 2026 5:11:27 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
சனி 7, மார்ச் 2026 4:52:06 PM (IST)

விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றால் வீட்டில் அனுமதி மறுப்பு: விஜய் மீது சங்கீதா புதிய புகார்
சனி 7, மார்ச் 2026 4:36:03 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா
சனி 7, மார்ச் 2026 12:04:40 PM (IST)

