» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஒரே நாளில் 3 பேருக்குச் சிறை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஞாயிறு 29, மார்ச் 2026 8:15:09 AM (IST)

பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கும் வகையில், எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 3 வெவ்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபர்களுக்கு ஓட்டப்பிடாரம் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கொலை மிரட்டல் விடுத்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

விளாத்திகுளம் அருகே உள்ள அருங்குளத்தைச் சேர்ந்த பொன்னுத்தாய் என்பவர் அளித்த புகாரின் பேரில், அதே பகுதியைச் சேர்ந்த மாரிசெல்வம் (44) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குடும்பத் தகராறில் பெண்ணை இழிவாகப் பேசியதுடன், உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 3,000 அபராதம் விதிக்கப்பட்டது.

பொது இடத்தில் அநாகரிகமாக நடந்தவருக்கு ஓராண்டு சிறை

கீழசெய்தலை பகுதியைச் சேர்ந்த ரெஸ்லின் அன்பு மேரி அளித்த புகாரின் பேரில், அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளதுரை என்பவர் மீது தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பொது இடத்தில் பெண்ணை இழிவாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக, இவருக்கு ஓராண்டு சிறை மற்றும் ரூ. 3,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தவறான நோக்கில் அணுகியவருக்கு 2 ஆண்டுகள் சிறை

சக்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த முத்துமாரி அளித்த புகாரின் பேரில், அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பெண்ணைத் தவறான நோக்கத்துடன் அணுகி அச்சுறுத்திய குற்றத்திற்காக, இவருக்கு 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 4,500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த 3 முக்கிய வழக்குகளிலும் ஓட்டப்பிடாரம் நீதிமன்ற நீதிபதி  பாக்கியராஜ் நேற்று சனிக்கிழமை இறுதித் தீர்ப்பை வழங்கினார். 

பெண்கள் மீதான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory