» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாநிலம் முழுவதும் தீவிரப் பிரசாரம்: பாஜக வேட்பாளர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!
வெள்ளி 3, ஏப்ரல் 2026 5:19:28 PM (IST)
பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அனைவருக்கும் தோளோடு தோள் நின்று மாநிலம் முழுவதும் நான் தீவிரப் பிரசாரம் மேற்கொள்வேன் என்று முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 27 வேட்பாளர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வேட்பாளர்கள் அனைவருக்கும் அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.பாஜக வெளியிட்டுள்ள பட்டியலில் சாத்தூரில் நயினார் நாகேந்திரன், கோவை வடக்கில் வானதி சீனிவாசன், அவிநாசியில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகக் களம் இறக்கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 5 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்களை வாழ்த்தி அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "2026-ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டுள்ள பாஜக வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஊழல், செயலற்ற தன்மை மற்றும் திமுகவின் துரோகத்தால் சலிப்படைந்துள்ள தமிழக மக்களின் முழு ஆதரவை இவர்கள் பெற்றுள்ளனர்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா உலக அளவில் வலிமையுடன் முன்னேறி வருவதாகக் குறிப்பிட்ட அவர், திமுக அரசை சாடினார். "தேசம் முன்னேறிக்கொண்டிருக்கும் வேளையில், தோல்வியடைந்த, ஆணவம் நிறைந்த மற்றும் சுயநலம் கொண்ட திமுக அரசால் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பின்தள்ளப்பட்டுள்ளது" என்று அவர் குற்றம் சாட்டினார்.
கூட்டணியின் வெற்றி குறித்து அவர் விடுத்துள்ள உறுதிமொழியில்: வரவிருக்கும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 210 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களது இலக்கு. ஒரு கட்சித் தொண்டனாக, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அனைவருக்கும் தோளோடு தோள் நின்று மாநிலம் முழுவதும் நான் தீவிரப் பிரசாரம் மேற்கொள்வேன் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பொய்களைப் பேசி வருகிறார்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:51:55 PM (IST)

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் தீயில் கருகின!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:33:16 AM (IST)

தேர்தலில் பிரச்சாரம் செய்வீர்களா? நோ கமெண்ட்ஸ் எனக் கூறிப் புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்!
சனி 4, ஏப்ரல் 2026 9:39:21 PM (IST)

உங்கள் தேவைகள் நிறைவேற தவெக துணை நிற்கும் : புதுவையில் விஜய் பிரச்சாரம்!
சனி 4, ஏப்ரல் 2026 5:48:31 PM (IST)

தேர்தலுக்காக வருபவர்களைப் புறக்கணிப்பீர் : தூத்துக்குடியில் கீதா ஜீவன் வாக்கு சேகரிப்பு!
சனி 4, ஏப்ரல் 2026 4:59:47 PM (IST)

ஈஸ்டர் திருநாள்: அன்பும், சகிப்புத்தன்மையும் பெருகட்டும் - விஜய் வசந்த் எம்.பி வாழ்த்து!
சனி 4, ஏப்ரல் 2026 4:48:36 PM (IST)

