» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்: சங்கரப்பேரி விலக்கில் பிரமாண்டக் கூட்டம்.
சனி 11, ஏப்ரல் 2026 8:40:09 AM (IST)

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடியில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் மாநிலம் முழுவதும் தீவிரமாகச் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தூத்துக்குடியில் நாளை இரவு 7 மணியளவில் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சங்கரப்பேரி விலக்கு பகுதியில் இதற்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் 6 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, அவர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளைக் காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திமுக மாவட்டச் செயலாளர்களான அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னின்று கவனித்து வருகின்றனர். முதலமைச்சரின் வருகையை ஒட்டி தூத்துக்குடி மாவட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இலவசங்களுக்கு நிதி எங்கிருந்து வரும்? கட்சிகள் விளக்கமளிக்க வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்!
சனி 11, ஏப்ரல் 2026 4:17:05 PM (IST)

உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு
சனி 11, ஏப்ரல் 2026 3:50:15 PM (IST)

ஜனநாயகன் பட விவகாரம்: சிபிஐ விசாரணை கோரத் தயாரா? விஜய்க்கு பாஜக சவால்!
சனி 11, ஏப்ரல் 2026 3:29:40 PM (IST)

சாதியை பரப்பும் களமாக திருவிழாக்கள் இருக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்
சனி 11, ஏப்ரல் 2026 12:16:07 PM (IST)

ஜனநாயகன் இணையத்தில் வெளியாக உதயநிதி காரணம் : ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!
சனி 11, ஏப்ரல் 2026 12:10:27 PM (IST)

கள்ளச்சாராயம் குடித்து செத்தவனுக்கு 10 லட்சம்: இதுதான் திராவிட மாடல் வளர்ச்சியா? சீமான் ஆவேசம்!
சனி 11, ஏப்ரல் 2026 12:00:57 PM (IST)

